'கர்மா இஸ் பூமராங்'.. வீடியோ வெளியிட்டு ஜிம் மாஸ்டரைப் பழிக்குப் பழி வாங்கிய பிரபல நடிகை!
நடிகை பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் தனது உடற்பியிற்சியாளர் பழிக்குபழி வாங்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து, சீரியலில் நடித்து பின்னர் வெள்ளித்திரைக்கு வந்தவர் பிரியா பவானிசங்கர். அவர் நடித்த முதல் படமான மேயாத மான் சூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து பிரியா நடித்த கடைக்குட்டி சிங்கம் படமும் பெரிய ஹிட். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் சேர்ந்து அவர் நடித்த மான்ஸ்டர் படமும் சூப்பர் ஹிட்டானதால், ஹாட்ரிக் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் இருக்கிறார்.

பிரியா பவானி சங்கர்:
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் பிரியா, சமூக வலைதளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அவர் வெளியிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு லைக்ஸ் அள்ளுகிறது. அந்தவகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

வீடியோ:
அந்த வீடியோவில் தனது உடற்பயிற்சியாளரை பழிக்குபழி வாங்குகிறார் பிரியா. 'கர்மா இஸ் பூமராங்' எனும் வாசகத்தை பதிவிட்டு அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். வீடியோவில் உடற்பயிற்சியாளருக்கு அதிகபடியான எடைக்கல்லை மாட்டி, உடற்பயிற்சி செய்ய வைக்கிறார் பிரியா.

வைரல்:
'எத்தனை முறை என்னை இது போல் செய்திருப்பாய். இப்போ மாட்டுநியா' எனும் மைண்ட் வாய்ஸ் மூடில் பிரியா இந்த வேலையை செய்கிறார். பிரியா மாட்டிவிட்ட எடைக்கல்லுடன் உடற்பயிற்சியாளரும் உடற்பயிற்சி செய்கிறார். அருகில் உள்ள அனைவரும் சத்தம் போட்டு சிரிக்கின்றனர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ரசிகர்கள் லைக்ஸ்:
பிரியா படங்களில் மட்டும் இன்றி நேரிலும் பழக இனிமையானவர். நடிகை என்ற பந்தா இல்லாமல், அனைவரிடமும் இயல்பாக பழகும் குணம் கொண்டவர். சிரித்த முகத்துடன் வலம் வருவதாலேயே அவருக்கு திரைத் துறையில் நல்ல பெயர் இருக்கிறது. அந்தவகையில் ஜிம்மில் தனது மாஸ்டருக்கு குறும்பாக இப்படி ஒரு டாஸ்க் கொடுத்திருப்பதை ரசிகர்கள் லைக்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











