அப்படி நடித்தால் ரசிகர்களுக்கு பிடிக்காது.. இதுதான் வசதி.. ப்ரியா பவானி சங்கர் ஓபன் டாக்

சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் டிமான்ட்டி காலனி 2 ஆகிய படங்கள் வெளியாகின. அவற்றில் இந்தியன் 2 படம் படுதோல்வியையும், டிமான்ட்டி காலனி 2 சூப்பர் ஹிட்டையும் பெற்றது. அடுத்ததாக ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தோன்றி; பிறகு சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர் ப்ரியா பவானி சங்கர். அதற்கு பிறகு மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முதல் பட வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களின் படத்திலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் நடிப்பில் அகிலன், பத்து தல, ருத்ரன் ஆகிய படங்கள் வரிசையாக வெளியாகின. மூன்று படங்களுக்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் ப்ரியா பவானி சங்கருக்கு சூப்பரான வரவேற்பை ரசிகர்கள் கொடுத்திருக்கின்றனர்.

priya bhavani shankar demonty colony 2 indian 2 2

சியில்லாத நடிகை?: ப்ரியா பவானி சங்கர் கைவசம் இப்போது ஏராளமான படங்கள் இருக்கின்றன. அதேசமயம் கடைசியாக அவர் கமல் ஹாசனுடன் நடித்த இந்தியன் 2, விஷாலுடன் நடித்த ரத்னம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை உள்ளிட்ட அத்தனை படங்களுமே தோல்வியைத்தான் சந்தித்தன. இதன் காரணமாக அவர் ராசியில்லாத நடிகை என்று ஒருதரப்பினரால் கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில்கூட பல விஷயங்களை ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிமான்ட்டி காலனி 2: ஆனால் அந்த முத்திரையை டிமான்ட்டி காலனி 2 படத்தில் கிழித்திருந்திருக்கிறார் பவானி. அவருக்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படமாக டிமான்ட்டி காலனி 2 கிடைத்தது. முக்கியமாக அந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த முக்கியத்துவத்தை உணர்ந்து தனது நடிப்பையும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் அவர். அடுத்ததாக ஜீவாவுடன் அவர் ஒரு படத்தில் நடித்துவருகிறார்.

காதல்: இதற்கிடையே ப்ரியா பவானி சங்கர் கல்லூரி படிக்கும்போதே காதலித்துவருகிறார். அவர் ராஜவேலு என்பவரை காதலிக்கிறார். ராஜவேலு வெளிநாட்டில் வேலை செய்துவருவது குறிப்பிடத்தக்கது. விரைவில் தங்களது திருமணம் நடக்கும் என்றும்; தனது தாய்க்கு தன்னைவிடவும் ராஜவேலுவைத்தான் ரொம்பவே பிடிக்கும் என்றும் ப்ரியா பவானி சங்கர் ஒருசில பேட்டிகளில் கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் கிளாமர் ரோலில் நடிப்பது பற்றி ப்ரியா பவானி சங்கர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

ப்ரியாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டி ஒன்றில், "கிளாமராக நடித்துவிட்டால் சீக்கிரமே பெரிய ஹீரோயினாக மாறிவிடலாம் என்று கூறமாட்டேன். அப்படி நடிப்பதுதான் உண்மையில் சினிமாவில் கஷ்டமான விஷயங்களில் ஒன்று. கிளாமர் ரோல் நடிக்கும் அளவுக்கு நான் இல்லை என்று நினைக்கிறேன். இப்போது நடிப்பதுதான் வசதியாக இருக்கிறது. ரசிகர்களுக்கும் என்னை கிளாமராக பார்ப்பது பிடிக்காது என்று நினைக்கிறேன். என்னுடைய வழக்கமான நடிப்பைத்தான் அவர்கள் விரும்புவார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X