யாரோட போட்டோ போட்டாலும் அவங்களோட போயிடுவேனா?.. திருமணம் எப்போ?.. பிரியா பவானி சங்கர் பளிச் பேட்டி!
சென்னை: சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணாக இருந்து மீடியாவில் செய்தி வாசிப்பாளராக மாறி அதன் பின்னர், சின்னத்திரையில் ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமான பிரியா பவானி சங்கர் ரத்னகுமார் இயக்கி அறிமுகமான மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மேயாத மான் படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் என வரிசையாக அவர் நடித்த படங்கள் வெற்றிப் பெற்றன. கோலிவுட் ரசிகர்களும் பிரியா பவானி சங்கர் மீது கிரஷ் ஆனார்கள். ஆனால், அருண் விஜய்யுடன் இணைந்து அவர் நடித்த மாஃபியா திரைப்படம் தான் அவருக்கு முதல் தோல்விப் படமாக மாறியது.

அதன் பின்னர் களத்தில் சந்திப்போம், கசட தபற, ஓ மணப்பெண்ணே, பிளட் மணி, ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை, ரத்னம் மற்றும் இந்தியன் 2 என வரிசையாக அனைத்து படங்களும் ஃபிளாப் ஆகின.
ராசியில்லாத நடிகை முத்திரை: இந்த படங்களுக்கு நடுவே தனுஷ் உடன் சின்ன ரோலில் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் மட்டுமே ஓடியது. ஆனால், அதில், அவர் ஹீரோயின் இல்லை. கோலிவுட்டில் ராசியில்லாத நடிகை என்றே பிரியா பவானி சங்கரை முத்திரை குத்திய நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு சில படங்கள் தோல்வியை தழுவுவது என்னால் கிடையாது என்றும் ஒருவர் மட்டுமே ஒரு சினிமாவை உருவாக்குவதில்லை. கமல் சாருக்கே இந்தியன் 2 சறுக்கலை கொடுக்கும் நிலையில், நானெல்லாம் எம்மாத்திரம் என பதில் அளித்துள்ளார்.

டிமான்டி காலனி 2: அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமான்டி காலனி படம் அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்தது, சியான் விக்ரமை வைத்து பிரம்மாண்டமாக உருவாக்கிய கோப்ரா படம் ஃபிளாப் ஆனது. இந்நிலையில், டிமான்டி காலனி 2ம் பாகத்தை இயக்கியுள்ள அஜய் ஞானமுத்து இந்த படத்தில் பிரியா பவானி சங்கரை நடிக்க வைத்துள்ளார். அடுத்த வாரம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த படம் வெளியாகவுள்ள நிலையில், அதன் புரமோஷனை முன்னிட்டு பிரியா பவானி சங்கர் மனம் திறந்து பல விஷயங்களை பேசியுள்ளார்.

போட்டோ போட்டா போயிடுவேனா?: ஹேப்பி பர்த்டே போஸ்ட் போட்டாலே போதும் எனக்கும் அந்த நடிகருக்கும் இடையே காதல் என கிசுகிசு எழுதிடுறாங்க. ஹரிஷ் கல்யாண், அசோக் செல்வன் எல்லாம் என்னோட நல்ல நண்பர்கள். நல்லவேளை அவங்களுக்கு எல்லாம் மேரேஜ் ஆகிடுச்சு. போட்டோ போட்டாலே போயிடுவேன்னு எப்படித்தான் நினைக்கிறாங்களோ, ரொம்பவே மோசமான கமெண்ட்டுகளை போடுறாங்க மனசு தாங்க மாட்டுது என பிரியா பவானி சங்கர் கிசுகிசுக்கள் பற்றி பேசியுள்ளார்.

அடுத்த ஆண்டு திருமணம்: சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாகவே ராஜ் என்பவரை காதலித்து வருகிறார் பிரியா பவானி சங்கர். சினிமாவுக்குத் தான் வரக் காரணமே ராஜ் தான் என்றும் கூறியுள்ளார். திருமணத்துக்கு பிளான் செய்யவே சோம்பேறியாக இருப்பதாலே தள்ளிப் போட்டு வருகிறோம் என்றும் அடுத்த ஆண்டு திருமணம் செய்துக் கொள்ளும் முடிவில் இருப்பதாகவும் பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications











