லாக்டவுனில் வேட்டை.. சத்தமில்லாமல் பல பட வாய்ப்புகளை குவிக்கும் பிரபல ஹீரோயின்.. என்ன ரகசியமோ?

சென்னை: லாக்டவுன் நேரத்தில் பல ஹீரோயின்கள் சமையல் அறை, வொர்க்கவுட்டே கதியென கிடக்கும் நிலையில் இந்த நடிகை மட்டும் சத்தமில்லாமல் பல பட வாய்ப்புகளை குவித்து வருகிறாராம்.

Recommended Video

Celebrity Gibberish Challenge | Dia Kushee, Trisha, Myna Nandhini, Priya Varrier

கிட்டத்தட்ட புதுப்படங்கள் ரிலீசாகி 2 மாதங்கள் ஆகி விட்டன. 2020ம் ஆண்டு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எந்தவொரு பெரிய படமும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடிக்கவில்லை.

தியேட்டர்கள் பூட்டிக் கிடப்பதால், OTT தளங்களில் படங்களை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு பல தயாரிப்பாளர்கள், நடிகர்கள் முன் வந்துள்ளனர்.

சரியாக அமையவில்லை

சரியாக அமையவில்லை

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லைகா தரப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா நடிப்பில் வெளியான மாஃபியா சாப்டர் ஒன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர். டிவி சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்த இவருக்கு மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் கைகொடுத்த அளவுக்கு மாஃபியா சரியாக அமையவில்லை.

ஷங்கர் இயக்கத்தில்

ஷங்கர் இயக்கத்தில்

சிம்பிள் பியூட்டி என சொல்வது போல, நம்ம வீட்டுப் பெண்ணாக இருக்கும் பிரியா பவானி சங்கரை பலருக்கும் பிடிக்கிறது. மாஃபியா படத்தைத் தவிர அவர் நடித்த எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான். அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பும் பிரியாவுக்கு கிடைத்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

விஷாலுடன்

விஷாலுடன்

இந்த லாக்டவுன் முடிந்தவுடன் அடுத்ததாக என்ன செய்யப் போகிறோம் என மற்ற நடிகைகள் நகத்தைக் கடித்துக் கொண்டு யோசித்து வரும் நிலையில், சத்தமே இல்லாமல், பல படங்களில் புக் ஆகி உள்ளார் நம்ம சென்னை பொண்ணு. தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பில் உருவாகப் போகும் விஷால் படத்தில் இவர் தான் நாயகியாம்.

விஜய் படம் இல்லை

விஜய் படம் இல்லை

மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தளபதி விஜய்க்கு அடங்கமறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேல் ஒரு கதையை கூறியிருப்பதாகவும், தளபதி 65 படத்தை அவர் தான் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் பரவின. ஆனால், தற்போது விஷால், பிரியா பவானி சங்கரை வைத்து கார்த்திக் தங்கவேல் இயக்கப் போவது உறுதியாகி இருக்கிறது.

இந்த நடிகருக்கும் ஜோடி

இந்த நடிகருக்கும் ஜோடி

அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கும் மற்றுமொரு படத்திலும் பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும், அந்த படத்தில் நாயகனாக நம்ம ராகவா லாரன்ஸ் மாஸ்டர் நடிக்கப் போகிறாராம். அந்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸை ராகவா லாரன்ஸ் நிதியுதவி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே

விஷால், ராகவா லாரன்ஸ் படங்களில் மட்டுமின்றி, ஏற்கனவே எஸ்.ஜே. சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் நடித்து வரும் பொம்மை, ஹரிஷ் கல்யாண் உடன் பெலி சூப்புலு தெலுங்கு பட ரீமேக், அதர்வாவின் ஆக்‌ஷன் திரில்லர் படமான குருதி ஆட்டம், சிம்பு தேவனின் கசடதபற மற்றும் ஜீவாவின் களத்தில் சந்திப்போம் என ஒரு பெரிய லிஸ்ட்டே பிரியா பவானி சங்கர் கைவசம் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X