Priya Bhavani Shankar: தூங்கு மூஞ்சி.. மேக்கப் இல்லை.. ஆனாலும் அழகி.. பிரியா பவானி சங்கர் பிக்ஸ்!
சென்னை: இந்த ஆண்டு வரிசையாக பல படங்களை ரிலீஸ் செய்து வருவதில் பிரியா பவானி சங்கருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இடையே தான் கடும் போட்டி என்று சொல்லலாம்.
அகிலன், பத்து தல, ருத்ரன் என வரிசையாக இந்த ஆண்டு இதுவரை பிரியா பவானி சங்கர் நடித்த 3 படங்கள் வெளியாகி உள்ளன. மேலும், பொம்மை, டிமான்டி காலனி 2, இந்தியன் 2 உள்ளிட்ட தமிழ் படங்கள் வெயிட்டிங்கில் உள்ளன.

தெலுங்கில் இந்த ஆண்டு இவர் நடித்த கல்யாணம் காமநீயம் படம் ஹிட் அடித்த நிலையில், ஜீப்ரா எனும் தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரியா பவானி சங்கர் மேக்கப் இல்லாமல் வெளியிட்ட லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்..
காதலருடன் சம்மர் டூர்:
நடிகை பிரியா பவானி சங்கர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே காதலித்து வரும் தனது காதலர் ராஜவேல் ராஜ் உடன் வியாட்நாம் உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த சம்மர் ஹாலிடேவை டூர் அடித்துக் கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில், பிரியா பவானி சங்கர் சோலோவாக இருக்கும் அழகிய போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
தூங்கி எழுந்து அப்படியே:
சொகுசு ரெசார்ட்டில் தூங்கி எழுந்து அப்படியே பால்கனியை பார்த்து உட்கார்ந்து இருக்க பிரியா பவானி சங்கரை அப்படியே செம க்யூட்டாக க்ளிக் செய்யப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

தூங்கி எழுந்து கண்ணை கசக்கியபடியே வெட்கப்படும் பிரியா பவானி சங்கரின் அழகை பார்த்த ரசிகர்கள் ரெட் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
மேக்கப்பே போடல:
மேக்கப் போடாமல் சில நடிகைகளின் முகத்தை பார்க்கவே முடியாது என பலரும் கலாய்ப்பார்கள். ஆனால், அந்த பிரச்சனை பிரியா பவானி சங்கருக்கு கொஞ்சமும் இல்லை. தூங்கி எழுந்து மேக்கப் போடாமல் உட்கார்ந்திருக்கும் போது க்ளிக் செய்யப்பட்ட போட்டோக்களிலேயே பேரழகியாக திகழ்கிறார் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

நைட் பேன்ட் மற்றும் டிசர்ட்டை அணிந்துக் கொண்டு செம கேஷுவலாக பிரியா பவானி சங்கர் போஸ் கொடுத்ததை பார்த்து ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











