கயிற்றில் வவ்வால் போல தொங்கிய பிரியா பவானி சங்கர்... நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ!

சென்னை : நடிகர் அருண் விஜய் இயக்குனர் ஹரி முதல் முறையாக கூட்டணி அமைத்திருக்கும் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.

சமீபத்தில் தமிழில் அறிமுகமான கதாநாயகிகளில் முன்னணியில் இருக்கும் பிரியா பவானி சங்கர் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் இப்போது ஜிம்மில் கயிற்றில் தலைகீழாக தொங்கியவாறு வெளியிட்டுள்ள சிரிப்பை வரவழைக்கும் குறும்புத்தனமான புகைப்படத்தை பதிவிட்டு நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ என தன்னைத்தானே கலாய்த்துக் கொண்டுள்ளார்.

பத்துக்கும் மேற்பட்ட

பத்துக்கும் மேற்பட்ட

சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே இப்பொழுது ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி இருக்கும் பிரியா பவானி சங்கர் கையில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இந்தியன் 2, பத்து தல, ருத்ரன், என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல் முறையாக இணைந்து

முதல் முறையாக இணைந்து

தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்று ஹீரோ அந்தஸ்தை பெற்றுத்தந்த பெல்லி சூபுளு தமிழில் ஓமணப் பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் ஹரிஷ் கல்யாண்,பிரியா பவானி சங்கர் ஜோடி முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

அதே சிம்புவுடன்

அதே சிம்புவுடன்

சமூக வலைதள பக்கங்களில் செம ஆக்டிவாக இருக்கும் பிரியா ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார். அந்த வகையில் தான் கல்லூரியில் படித்த பொழுது வகுப்பை கட் அடித்துவிட்டு சிம்புவின் மன்மதன் படம் பார்க்க சென்றதாகவும் கல்லூரியில் தான் ஒரு சிம்புவின் ரசிகை எனவும் கூறியிருந்தார். இப்பொழுது அதே சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

நல்லா சர்க்கஸ் பண்றே

நல்லா சர்க்கஸ் பண்றே

உடற்பயிற்சியில் பெரும் ஆர்வம் கொண்டுள்ள இவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் ஜிம் வொர்க் அவுட் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.இந்த நிலையில் கயிற்றில் தலைகீழாக வவ்வால் போல தொங்கியவாறு குறும்புத்தனமான ஜிம் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு "ஹேய் நல்லா சர்க்கஸ் பண்றே மேன் நீ" என தன்னைத்தானே கலாய்த்துக் கொண்டுள்ளார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர்களும் ஒரு படி மேலே போய் அடுத்து மேடம் கைத்து மேலே நடப்பார், ஒரு ஜான் வயித்துக்காக வித்த காட்றாங்க, ஓ கொரளி வித்தையா என தங்களின் பங்கிற்கும் பிரியாவை கலாய்த்து விட்டு செல்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X