கேரம் போர்டில் அந்த காயினை மட்டும் குறிவைத்த பிரியா பவானி சங்கர்...!

சென்னை : நடிகர் சிம்புவின் தீவிர ரசிகையான பிரியா பவானி சங்கர் பத்து தல படத்தில் அவருடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்தியன் 2, ஓமணப்பெண்ணே, ருத்ரன், ஹாஸ்டல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

லாக்டவுனில் சேட்டைகள் செய்த போட்டோக்கள் வீடியோக்களை தொடர்ந்து இப்பொழுது கேரம் போர்டில் காயினை குறிவைத்து விளையாடும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தியன் 2

இந்தியன் 2

சமீபத்தில் தமிழில் அறிமுகமான கதாநாயகிகளில் கைநிறைய திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். அந்தவகையில் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் இந்தியன்2ல் ஒப்பந்தம் ஆகியிருந்தார். படப்பிடிப்பு இன்று வரை தொடங்க முடியாமல் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையில் பிரச்சனை ஜவ்வாக இழுத்து கொண்டுள்ளது.

ரொமான்டிக்காக

ரொமான்டிக்காக

விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக தெலுங்கில் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற பெல்லி சூபுளு தமிழில் ஓமணப்பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்து வருகின்றனர். காதலர்களுக்கு பிடிக்கின்ற வகையில் செம ரொமான்டிக்காக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கி வருகிறார்.

வகுப்பை கட் அடித்து விட்டு

வகுப்பை கட் அடித்து விட்டு

சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்த பிரியா பவானி சங்கர் அதில் தான் ஒரு தீவிர சிம்பு ரசிகை எனவும் கல்லூரி படிக்கும்போது வகுப்பை கட் அடித்து விட்டு சரவணா படத்திற்கு சென்று வந்ததாகவும் கூறி இருக்கையில், இப்பொழுது சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

சந்திரமுகி வடிவேலு ஸ்டைலில்

சந்திரமுகி வடிவேலு ஸ்டைலில்

குறுகிய காலத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களை உருவாக்கிய பிரியா பவானி சங்கர் இதுவரை ஒரு படத்தில் கூட கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் காட்சிகளிலும் நடித்ததில்லை இருப்பினும் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. டாக்டவுனில் பல சேட்டைகள் செய்து அந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வைரலாகி வந்த இவர் இப்பொழுது வீட்டில் சோடாபுட்டி கண்ணாடி அணிந்து கொண்டு சிகப்பு காயினை குறிவைத்து பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி வடிவேலு ஸ்டைலில் சிவப்பு காயின் முன்னாடி போகுது கருப்பு காயினும் பின்னாடியே போகுதே என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X