ஐயோ அப்படி பாக்காதீங்க பிரியா.. மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட இளம் நடிகை!

சென்னை : தமிழ் சினிமாவில் சைலண்டாக கைநிறைய திரைப் படங்களில் ஒப்பந்தமாகி கிடுகிடுவென வளர்ந்து வரும் மிக முக்கியமான நடிகை பிரியா பவானி சங்கர்.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்க விரைவில் தெலுங்கிலும் அறிமுகமாக உள்ளார்.

பத்து தல ,ஓ மணப்பெண்ணே இந்தியன்-2 ,ருத்ரன் என பல திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவனி சங்கர் இப்பொழுது மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கசக்கி பிழிந்து உள்ளார்.

ரீமேக்

ரீமேக்

நடிகை பிரியா பவானி சங்கர் முதல் முறையாக அசோக் செல்வன் உடன் இணைந்து ஹாஸ்டல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2015ல் வெளியான அடி காபியரே கூடமானி என்ற மலையாள படத்தின் ரீமேக் ஆகும். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் கல்லூரி கதை களத்தை கொண்டு உருவாகி வருகிறது.

முன்னணி கதாநாயகியாக

முன்னணி கதாநாயகியாக

டிவி சீரியல்களில் நடித்தபோதே பல கோடி ரசிகர்களை பெற்ற பிரியா மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்பொழுது பட்டையை கிளப்பி கொண்டு உள்ளார். சத்தமே இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டு வரும் இவர் மிக விரைவிலேயே முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என கூறப்படுகிறது.

தெலுங்கிலும் அறிமுகமாகிறார்

தெலுங்கிலும் அறிமுகமாகிறார்

அருண் விஜய் 33, இந்தியன் 2, ஓ மணப்பெண்ணே,ருத்ரன், பத்து தல என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கருக்கு தெலுங்கிலும் பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பதால் மிக விரைவிலேயே தெலுங்கிலும் அறிமுகமாகிறார் என சொல்லப்படுகிறது.

3 நாட்கள் வீகெண்ட்ஸ்

3 நாட்கள் வீகெண்ட்ஸ்

ரசிகர்களால் நேச்சுரல் பியூட்டி குயின் என அன்போடு அழைக்கப்படும் இவர் இப்பொழுது மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு களைப்பாக உணர்ந்தேன் என்றால் ஒரு வாரத்திற்கு 3 நாட்கள் வீகெண்ட்ஸ்.. வெள்ளிக் கிழமையும் வார இறுதி நாள் தான் நீங்கள் களைப்பாக உணர்ந்தால். என வெள்ளிக்கிழமையையும் வீகெண்ட்ஸ் லிஸ்டில் சேர்த்துள்ள பிரியா பவானி சங்கரின் இந்த மேக்கப் இல்லாத புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்.. ஐயோ இப்படி பார்க்காதீங்க மனசுக்குள்ளே இடி மின்னல் புயல் மழை எல்லாம் பேஞ்சிகிட்டு இருக்கு என வர்ணித்திருக்க மற்றொருவர் உங்கள பாக்குறப்ப ஷாலினி அஜித்குமார் மாதிரியே இருக்கிங்க என தினுசு தினுசாக வர்ணித்து வருகின்றனர். ஆமா இந்த விஷயம் அஜீத்-க்கு தெரியுமா!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X