»   »  பருத்திவீரன் கிடைச்சாச்சு: 2016ல் முத்தழகுக்கு திருமணங்கோ!

பருத்திவீரன் கிடைச்சாச்சு: 2016ல் முத்தழகுக்கு திருமணங்கோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2016ம் ஆண்டு தனது காதலர் முஸ்தபா ராஜை திருமணம் செய்யப் போவதாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

நடிகை பிரியாமணி மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜை காதலித்து வருகிறார். இத்தனை நாட்களாக காதலர் பக்றி கேட்டால் நழுவிக் கொண்டிருந்த அவர் தற்போது முஸ்தபாவை பற்றி ட்வீட் செய்யும் அளவுக்கு ஆகிவிட்டார்.

இந்நிலையில் காதல் மற்றும் திருமணம் பற்றி பிரியாமணி கூறுகையில்,

சிசிஎல்

சிசிஎல்

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சிசிஎல் போட்டிகளின் போது தான் நான் முஸ்தபாவை முதல் முறையாக சந்தித்தேன். இரண்டாவது சந்திப்பின்போது செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டோம்.

எதிர் எதிர்

எதிர் எதிர்

நானும் முஸ்தபாவும் குணத்தில் எதிர் எதிரானவர்கள். ஒரு வேளை அது தான் எங்களை ஒன்று சேர்த்தது என்று நினைக்கிறேன்.

காதல்

காதல்

நான் தான் முதலில் காதலை சொன்னேன். எஸ்.எம்.எஸ். மூலம் காதலை சொன்னேன். அவர் அதை ஜோக் என நினைத்தார். இரண்டு மாதங்கள் கழித்து தான் நான் சீரியஸாக கூறியதை புரிந்து கொண்டார்.

திருமணம்

திருமணம்

2016ம் ஆண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். ஆனால் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.

படம்

படம்

திருமணத்திற்கு பிறகும் வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன். திருமணத்திற்கு பிறகு நான் மும்பையில் தங்கி இருப்பேன். பட வாய்ப்புகளை பொறுத்து தான் நான் எங்கு தங்குவது என்பதை முடிவு செய்வேன் என்றார் பிரியாமணி.

English summary
Actress Priya Mani told that she will marry her beau Mustafaraj in 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil