முத்துலட்சுமியாக மாற மறுத்த 'முத்தழகி'...!

By Sudha

இன்னும் ஒரு வீரப்பன் கதை படமாகப்போகிறது கன்னடத்தில். இந்தப் படத்தில் வீரப்பனின் மனைவி வேடத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளார் பிரியாமணி

வீரப்பன் மனைவி முத்துலட்சுமியின் கதையாம் இது. இதில் முத்துலட்சுமி வேடத்தில் நடிக்கத்தான் பிரியா மணியை அணுகினராம்.

ஆனால் நடிக்க விரும்பவில்லை என்று கூறி விட்டாராம் பிரியா மணி.

வீரப்பனின் வன யுத்தம்

வீரப்பனின் வன யுத்தம்

சில மாதங்களுக்கு முன்புதான் வனயுத்தம் என்றபெயரில் வீரப்பன் கதையைப் படமாக்கி வெளியிட்டனர்.

விஜயக்குமாராக அர்ஜூன்

விஜயக்குமாராக அர்ஜூன்

இப்படத்தில் சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் வேடத்தில் நடிகர் அர்ஜூன் நடித்திருந்தா்.

வீரப்பனாக கிஷோர்

வீரப்பனாக கிஷோர்

வீரப்பன் வேடத்தில் கன்னட நடிகர் கிஷோர் நடித்திருந்தார்.

முத்துலட்சுமியாக விஜயலட்சுமி

முத்துலட்சுமியாக விஜயலட்சுமி

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை விஜயலட்சுமி நடித்திருந்தார்.

படம் ஊத்திக்கிச்சு

படம் ஊத்திக்கிச்சு

பெரும் பரபரப்புக்கு மத்தியில் வந்த இந்தப் படம் பெரும் தோல்வியைத்தான் தழுவியது.

மறுபடியும் வீரப்பன்

மறுபடியும் வீரப்பன்

இந்த நிலையில் இன்னொரு வீரப்பன் படத்தை கன்னடத்தில் உருவாக்கவுள்ளளனராம். ஆனால் இது வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியின் கதையாம்.

முத்துலட்சுமி.. .வீரப்பன் மனைவி

முத்துலட்சுமி.. .வீரப்பன் மனைவி

படத்திற்குப் பெயரும் முத்துலட்சுமிதான். ஜெகதீஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

முத்துலட்சுமி பட்ட கஷ்டங்கள்

முத்துலட்சுமி பட்ட கஷ்டங்கள்

முத்துலட்சுமி வீரப்பனுடன் வாழ்ந்தபோதும், அவரை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டபோதும் பட்ட கஷ்டங்களை விவரிக்கிறதாம் இந்தப்படம்.

மறுத்தார் பிரியாமணி

மறுத்தார் பிரியாமணி

இந்தப் படத்தில் வீிரப்பன் மனைவி வேடத்தில் நடிக்க பிரியாமணியை அதன் இயக்குநர் அணுகினாராம். ஆனால் பிரியாமணி மறுத்து விட்டாராம்.

முடியாதுன்னு சொல்லிட்டேன்

முடியாதுன்னு சொல்லிட்டேன்

இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பிரியா மணி அளித்த பேட்டியில்,கடந்த ஆண்டு யாரோ வந்து என்னை இதுதொடர்பாக அணுகினர். ஆனால் அப்போதே அதை மறுத்து விட்டேனே... சமீபத்தில் யாரும் இதுதொடர்பாக என்னிடம் பேசவில்லை. நான் இப்படத்தை செய்யவில்லை என்றுகூறியுள்ளார்.

அடுத்து எந்த லட்சுமியைத் தேடப்போகிறார்களோ...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X