twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காஷ்மீரில் சிக்கிக்கொண்ட ப்ரியாமணி படக்குழு ..கடும் பனிபொழிவால் அவதி !

    |

    சென்னை : ப்ரியாமணி நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்துக்கொண்டு இருக்கின்றது .

    படப்பிடிப்பின் போது கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கேயே சிக்கி கொண்டதாக தகவல் வெளிவந்து உள்ளது.

    மூஞ்சி பூரா வைர மாஸ்க்.. லெஜண்ட் சரவணா ஹீரோயினுக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா.. இது வேற மாறி!மூஞ்சி பூரா வைர மாஸ்க்.. லெஜண்ட் சரவணா ஹீரோயினுக்கு வந்த வாழ்வை பார்த்தீங்களா.. இது வேற மாறி!

    அதனால் காஷ்மீரில் எடுக்க வேண்டிய சீன்களை மட்டும் விரைவாக முடித்து விட்டு மும்பைக்கு திரும்பப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

    பருத்திவீரன் நாயகி

    பருத்திவீரன் நாயகி

    ப்ரியாமணி என்றாலே தனது தனித்துவமான நடிப்புக்கு பேர்போனவர்.பல முன்னனி நடிகர்களுடன் நல்ல கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு அந்தஸ்தை பெற்று ,ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருந்தார்.கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர்.அது ஒரு கனா காலம் .பருத்திவீரன் போன்ற பல தமிழ் படங்களில் நடித்தார்.தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துள்ளார்.தற்போது ஹிந்தியில் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

    லைவ் ஸ்பாட்

    லைவ் ஸ்பாட்

    பெரும்பாலும் வெளிநாட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அந்த படத்தின் அழகை கூட்டும். அதிலும் குறிப்பாக காஷ்மீர் போன்ற பகுதிகளில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக அமையும். ஆனால் இதில் பல சவால்கள் நிறைந்துள்ளது. அதிலும் இந்த கொரோனா சமயத்தில் வெளிநாடுகளில் சென்று ஷூட்டிங் நடத்துவது பெரும் சவாலாகவே உள்ளது .

    சிக்கிய படக்குழு

    சிக்கிய படக்குழு

    தற்போது ப்ரியாமணி Quotation Gang என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் .குத்துச்சண்டை இயக்குனர் விவேக் இயக்குகிறார். 15 நாட்கள் தூதபத்ரியில் தொலைதூர இடத்தில் படப்பிடிப்பின் போது , அதில் நடித்த ப்ரியாமணி குழுவினர் கடுமையான பனிப்பொழிவு, தொற்றுநோய் போன்ற பல பிரச்சனைகளில் சிக்கியதாக தகவல் வெளிவந்து உள்ளது.

    தங்குவதற்கு இடம் இல்லை

    தங்குவதற்கு இடம் இல்லை

    இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் காயத்ரி சுரேஷ் கூறுகையில், கோவிட் காரணத்தால் காஷ்மீரில் படமெடுக்க அனுமதி பெறுவது மிக கஷ்டமாக இருந்தது. அனுமதி பெற்று தூதபத்ரியில் படமெடுக்க தொடங்கினோம். மின்இணைப்பும் இல்லை. வாஷ்ரூமில் உள்ள தண்ணீர் ஐஸ் போன்று இருந்தது. தங்குவதற்கு எந்த ரிசார்ட்டும் கிடைக்கவில்லை. தினமும் ஐந்து மணிநேரம் தால் ஏரி பகுதியிலிருந்து தூதபத்ரி வரை பயணம் செய்ய வேண்டியிருந்தது.

    சவால் நிறைந்த

    சவால் நிறைந்த

    ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக சீக்கிரமாக கிளம்பி விடுவோம். நாட்கள் ஆக ஆக பனிப்பொழிவு அதிகமானது. வாகனம்செல்ல முடியாததால் நடந்தே சென்றோம். மேலேயே எங்களால் இருக்க முடியவில்லை. இவ்வாறு இடைஞ்சல்களுக்கு மத்தியில் விவேக் மற்றும் ஒளிப்பதிவாளர் அருணும் அடுத்த நாள் காட்சியை படமாக்கினர்.

    மும்பை திரும்பி

    மும்பை திரும்பி

    கடைசிநாள் படப்பிடிப்பின் போது சாகசத்திற்கு குறைவே இல்லை. பனி அதிகமாக இருந்த நிலையில், ஒரு சண்டை காட்சி எடுத்துக்கொண்டிருக்கும்போது, ஒரு பெரிய கல் உருண்டு வந்தது. அதனால் ஒரு புதிய இடத்தை கண்டுபிடித்தோம். அங்கு சில வீடுகள் பனிகள் மூழ்கின. மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஏப்ரல் 8ம் தேதி ப்ரியாமணி மற்றும் சாராவை வைத்து தொடங்க உள்ளோம். இதன் பிறகும் மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

    English summary
    Actress Priya Mani and her team stranded in kashmir snow storm.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X