நான் உண்மையை சொல்லட்டுமா, அப்புறம் இருக்கு வேடிக்கை: ப்ரியா வாரியர்
திருவனந்தபுரம்: நான் பேச ஆரம்பித்தால் சிலருக்கு பிரச்சனை வரும் என்று ப்ரியா பிரகாஷ் வாரியர் தெரிவித்துள்ளார்.
ஒரு அடார் லவ் படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. கண்ணடித்து பிரபலமான ப்ரியா பிரகாஷ் வாரியரின் நடிப்பு பலருக்கும் பிடிக்கவில்லை. ப்ரியாவால் தான் படம் பிளாப்பானது என்று படக்குழு நம்புகிறது.
தயாரிப்பாளர்கள் அழுத்தம் கொடுத்ததால் தான் கதையை மாற்றி ப்ரியாவை ஹீரோயினாக்கினேன் என்று இயக்குநர் உமர் லுலு தெரிவித்தார்.

இயக்குநர்
ப்ரியா வாரியரை விட நூரின் ஷெரிஃப் நல்ல நடிகை. நான் தற்போது ப்ரியாவுடன் டச்சில் இல்லை என்று உமர் லுலு பேட்டி ஒன்றில் தெரிவித்தார். ப்ரியாவை தேவையில்லாமல் ஹீரோயினாக்க வைத்து தன் படத்தை கெடுத்துவிட்டார்கள் என்ற தொனியில் இருந்தது அவர் பேட்டி.

நூரின் ஷெரிஃப்
கண்ணடித்த வீடியோ பிரபலமானதால் ப்ரியா வாரியரின் கதாபாத்திரத்தை மாற்றி அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதனால் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்ட என்னை ஓரங்கட்டிவிட்டனர் என்று நூரின் ஷெரிஃப் தெரிவித்தார்.

ப்ரியா வாரியர்
ஆளாளுக்கு ப்ரியா வாரியர் மீது அதிருப்தி தெரிவித்த நிலையில் அவரும் பதிலுக்கு பேசியுள்ளார். நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலருக்கு பிரச்சனை வரும். நான் ஏன் அவர்களை போன்று இருக்க வேண்டும் என அமைதியாக உள்ளேன். கர்மா பார்த்துக் கொள்ளும். அது விரைவில் நடக்கும் என்று இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார் ப்ரியா.

விமர்சனம்
ஏற்கனவே படம் ப்ரியாவால் தான் ஓடவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் அவர் படக்குழுவை விமர்சித்து போஸ்ட் போட்டார். பின்னர் என்ன நினைத்தாரோ சத்தமில்லாமல் அதை நீக்கிவிட்டு அடுத்த பட வேலையை பார்க்க சென்றுவிட்டார்.


Click it and Unblock the Notifications











