Priya Varrier: ப்ளூ பிகினியில்.. மாலத்தீவில் சோலோவாக மஜா பண்ணும் பிரியா வாரியர்.. செம க்ளிக்ஸ்!
திருவனந்தபுரம்: மலையாள திரையுலகின் இளம் நடிகையான பிரியா வாரியர் மாலத்தீவில் தனது சம்மர் விடுமுறையை கொண்டாடி வரும் நிலையில், அங்கே நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக வெளியிட்டு கவர்ச்சி விருந்து கொடுத்துள்ளார்.
ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற பாடலில் பிரியா வாரியர் கண் அடிக்கும் அந்த ஒரு காட்சியே தேசிய அளவில் அவருக்கு ரசிகர்களை ஓவர் நைட்டில் கொண்டு வந்து குவித்தது.
மலையாளப் படங்களை தாண்டி பாலிவுட் வரை அவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. இன்ஸ்டாகிராமில் 7.5 மில்லியன் ரசிகர்கள் அவரை ஃபாலோ செய்து வருகின்றனர்.

மாலத்தீவில் மஜா: நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் உள்ளனர். செம ஹாட்டான போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை எப்போதுமே தனது கன்ட்ரோலில் வைத்திருக்கும் இந்த சிமிட்டுக் கண்ணியின் அழகில் ரசிகர்கள் சொக்கிப் போயுள்ளனர்.
கத்தரி முடிந்தாலும் வெயில் இன்னமும் வெளுத்து வாங்கி வரும் நிலையில், பல சினிமா பிரபலங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விடுமுறை கொண்டாடி வருகின்றனர். நடிகை பிரியா வாரியர் தனது சம்மர் ஹாலிடேவை மாலத்தீவில் மஜாவாக கொண்டாடி வருகிறார்.

பிகினியில் பக்கா: அரை டவுசருடன் மாலத்தீவில் சுற்றித் திரிந்த போட்டோக்களை மட்டும் பார்க்கவா ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர் என்பதை புரிந்துக் கொண்ட பிரியா வாரியர் கடலில் பிகினி உடையில் இறங்கி கிக்கேற்றும் போஸ் கொடுத்த எடுத்த ஹாட் பிகினி போட்டோக்களை வெளியிட்டு அனலை கூட்டி உள்ளார்.
நீல நிற பிகினியில் நீலக் கடலில் நச்சென போஸ் கொடுத்த பிரியா வாரியர் போட்டோவுக்கு சும்மா ஹார்ட்டின்கள் லட்சக் கணக்கில் பறக்கின்றன.

ஒரே ஜாலி தான்: சோலோவாக மாலத்தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் நடிகை பிரியா வாரியர் பீச் அருகே தங்கியிருக்கும் ரெசார்ட் நீச்சல் குளத்தில் உள்ள டியூப்பில் ஏறி அமர்ந்து கொண்டு செம ரிலாக்ஸ் ஆக இயற்கையை கண்டு ரசிக்கும் லேட்டஸ்ட் போட்டோவை தற்போது பதிவிட்டு ரசிகர்களுக்கு கிளாமர் ட்ரீட் கொடுத்துள்ளார்.
மாலத்தீவில் இருந்து ரிட்டர்ன் வரும் வரை பிரியா வாரியரிடம் இருந்து இதே போல ஏகப்பட்ட ஹாட் போட்டோக்கள் கிடைக்கும் என்பதால் ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே முகாமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











