Priya Varrier Lip Lock : இன்டர்நெட்டை தெறிக்கவிடும் ப்ரியா வாரியரின் லிப் டூ லிப் முத்தக் காட்சி
Recommended Video

சென்னை: ப்ரியா பிரகாஷ் வாரியரின் லிப் டூ லிப் முத்தக் காட்சி வீடியோ வைரலாகியுள்ளது.
ஒமர் லுலு இயக்கத்தில் ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளது.
காதலை பற்றிய படம் காதலர் தினத்தன்று ரிலீஸாக உள்ளது.
முத்தம்
பட ரிலீஸுக்கு முன்பு ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. அதில் ப்ரியாவுக்கு நடிகர் ரோஷன் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துள்ளார். முதலில் கண்ணடித்து பிரபலமான ப்ரியா தற்போது லிப் டூ லிப் காட்சிக்காக பிரபலமாகியுள்ளார். பள்ளியில் லிப் டூ லிப்பா?, வெளங்கிடும்.
ப்ரியா
ப்ரியா வாரியரின் முத்தக் காட்சி பற்றி தான் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்து தான் படக்குழு இந்த டீஸரை வெளியிட்டிருக்கும்.
யூடியூப்
ஒரு அடார் லவ் ஸ்னீக் பீக்கை லைக் செய்தவர்களை விட டிஸ்லைக் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டு புள்ளைக வேலையாக இருக்குமோ?
சமூக வலைதளம்
யூடியூபில் அவசர அவசரமாக டிஸ்லைக் செய்தபோதிலும் அந்த முத்தக் காட்சியை மட்டும் கட் செய்து சமூக வலைதளங்களில் ஷேர் செய்கிறார்கள் நெட்டிசன்கள்.


Click it and Unblock the Notifications











