இந்த நடிகை கண்ணடிச்சா மட்டும் இல்ல டாட்டூ போட்டாலும் டிரெண்ட் தான்
சென்னை: ப்ரியா பிரகாஷ் வாரியர் போட்டுள்ள இரண்டு டாட்டூக்கள் பிரபலமாகியுள்ளது.
ஒரு அடார் லவ் படத்தில் வரும் பாடல் காட்சியில் கண்ணடித்ததன் மூலம் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். ஒரு அடார் லவ் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் பிப்ரவரி மாதம் 14ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் அவர் படத்தை விளம்பரம் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கிடையே ப்ரியா இரண்டு டாட்டூ போட்டுள்ளார். மார்பில் 'Carpe Diem' என்று எழுதியிருக்கிறது.
கையில் ரோஜாப்பூ தலைகீழாக இருக்கும்படி டாட்டூ போட்டுள்ளார். தான் புதிதாக டாட்டூ போட்டதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடம் தெரிவித்தார்.

அவர் கண்ணடித்தது போன்றே இந்த டாட்டூக்களும் பிரபலமாகிவிட்டன. வாலிபர்களுக்கு ப்ரியாவின் டாட்டூ பிடித்துப் போக பெண்களோ ஆமா இவளுக்கு மட்டும் தான் டாட்டூ போடத் தெரியுமாக்கும் என்று கடுப்பாகியுள்ளனர்.
வாலிபர்கள் ப்ரியாவை பார்த்து ஜொள்ளு விட விட இளம் பெண்களுக்கு அவரை பிடிக்காமல் போயுள்ளது.


Click it and Unblock the Notifications











