»   »  பாவாடை, தாவணி, ப்ரியா மணி

பாவாடை, தாவணி, ப்ரியா மணி

Subscribe to Oneindia Tamil

தெத்துப் பல் முத்தழகி ப்ரியா மணி படு உற்சாகமாக இருக்கிறார். அவர் பாவாடை,தாவணியில் கலக்கியிருக்கும் பருத்தி வீரன் படம் படு சூப்பராக வந்திருப்பதால் வந்தகுஷிதான் இது.

முதல் படமான கண்களால் கைது செய், ப்ரியாவுக்கு கை கொடுக்கவில்லை. ஆனால்அவரது அசத்தல் ஸ்டிரக்சர் இயக்குநர்களைக் கவர்ந்தது. இதனால் அப்படியும்இப்படியுமாக படங்கள் கிடைத்து நடித்து வந்தார் ப்ரியா.

பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தில் ப்ரியாவை நன்றாக நடிக்கவைத்திருந்தார். நடிப்போடு கிளாமருக்கும் நிறையவே வாய்ப்புகள். அசத்தியிருந்தார்ப்ரியா. ஆனாலும் பெரிய அளவில் படம் ஓடாததால், ப்ரியாவுக்கு மீண்டும் ஒருதேக்கம்.

அப்புறம் மலையாளத்தில் ஒற்ற நாணயம் என்ற படத்தில் பிச்சைக்காரி வேடத்தில்அசத்தலாக நடித்திருந்தார் ப்ரியா. இந்தப் படத்தின் மூலம் மலையாளத்திலாவது மலைஏற முடியுமா என்று பார்த்தார் ப்ரியா. ம்ஹூம், அப்படம் அவரைத் தூக்கிவிடவில்லை.

இதனால் சோர்ந்து போயிருந்த ப்ரியாவுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பருத்திவீரன் வாய்ப்பை வழங்கினார் இயக்குநர் அமீர். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில்இதில் நடித்திருக்கிறாராம் ப்ரியா. கிராமத்துப் பெண்ணாக, பாவாடை, தாவணியில்தெத்துப் பல் தெரிய சிரித்து, அப்பாவித்தனமாக பேசி அசத்தல் நடிப்பை அள்ளிவழங்கியுள்ளாராம் ப்ரியா.

அய்யோ, இந்தப் படத்தைப் பற்றி சொல்வதாக இருந்தால் எனக்கு நேரமே போதாது.அவ்வளவு அருமையான படம் இது. என்னோட கேரக்டர் பேர் என்ன தெரியுமா?முத்தழகு. சூப்பரா இருக்குல்ல. எனக்கு நல்ல நல்ல வசனம் கொடுத்துள்ளார் அமீர்.அத்தோடு அழகாகவும் நடிக்க நிறைய வாய்ப்பு.

இப்படத்தில் எனக்கு மேக்கப் கிடையாது. மேக்கப் போடாமலேயே நான் படு அழகாகஇருப்பதாக கூறினார் அமீர். இந்த கேரக்டருக்கு மேக்கப்பே தேவையில்லைஎன்பதால் அப்படியே நான் நடித்துள்ளேன். பாவாடை தாவணியில் கூட நான் ரொம்பஅழகு தெரியுமோ என்று வெட்கப் புன்னகை பூக்கிறார் ப்ரியா.

தமிழ், மலையாளத்தில்தான் இப்படி மேக்கப் போடாமலேயே நடித்துக்கொண்டிருக்கிறார் ப்ரியா. தெலுங்கில், பெண்ணியின கொத்தலு (கல்யாணம் ஆனஉடனே என்று அர்த்தமாம்!) என்ற படத்தில் படு மாடர்ன் கேர்ள் ஆக வந்துகலக்கியிருக்கிறாராம் ப்ரியா. இதில் கிளாமர் எக்கச்சக்கம். பின்னிப்புட்டாராம்.

தொடர்ந்து பாவாடை தாவணி, பிச்சைக்காரி என அதிகம் கிளாமர் காட்ட முடியாதபாத்திரங்களாகவே வருவதால் ப்ரியாவுக்கு வருத்தம் ஏதும் இல்லையாம். ஏன்கிளாமராக நடிக்க மாட்டேங்கிறீங்க என்று சிலர் என்னிடம் வருத்தமாக கேட்கிறார்கள்.பாவாடை தாவணியிலும் கூட கிளாமர் காட்ட முடியும். அது ஒரு கனாக்காலம்படத்தில் நான் கிளாமர் காட்டித்தானே சில காட்சிகளில் நடித்துள்ளேன்.

கிளாமருக்கான வாய்ப்பை இயக்குநர்களே ஏற்படுத்திக் கொடுப்பார்கள். நாமாகபோய் எப்படி கேட்க முடியும்? என்னைப் பொருத்தவரை கிளாமராக இருந்தாலும் சரி,நடிப்பாக இருந்தாலும் சரி எப்படின்னாலும் எனக்கு ஓ.கே.தான் என்கிறார்வெவரமாக.

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நிறைய விவரங்கள் தெரியாதாம் ப்ரியாவுக்கு.ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்தபோதுகிடைத்த அனுபவம் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டு விட்டாராம்.

பரவாயில்லையே, கெட்டிக்காரிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil