»   »  சதா வழியில் பிரியா மணி!

சதா வழியில் பிரியா மணி!

Subscribe to Oneindia Tamil

அந்நியன் வந்த பிறகு சம்பளத்தில் அள்ளலாம் என காத்திருந்து டுமீல் ஆனார் சதா. இப்போது அவரது வழியில்பருத்தி வீரன் வரட்டும், பார்த்துக் கொள்ளலாம் என ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் பொறுமைகாக்கிறாராம் பிரியா மணி.

சதாவின் திரையுலக வரலாற்றை அந்நியனுக்கு முன்பு, அந்நியனுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம்.அந்நியனுக்கு முன் சதாவின் டிமாண்ட் படு கிராக்கியாக இருந்தது. அவர் சொன்னதுதான் சம்பளம், அவர்நடிப்பதுதான் நடிப்பு என படு பந்தாவாக இருந்தார் சதா.

அந்நியனில் நடித்தபோது இந்தப் படம் வந்தால் எனது ரேஞ்சே வேறு என்று கூறி வந்த பல வாய்ப்புகளையும்வேண்டாம் என நிராகரித்து வந்தார். ஆனால் அந்நியன் வந்தது, விக்ரமுக்கும், ஷங்கருக்கும் பெயர் வாங்கித்தந்தது. ஆனால் சதாவை மட்டும் சத்தாய்த்து விட்டது.

அந்நியன் சதாவுக்கு ஆப்பு வைத்து விட்டான். ஒரு படமும் வராமல் கடுப்பானார் சதா. பிரம்மப் பிரயத்தனம்செய்தும் கூட ஒருவரும் அவரை சீந்தவில்லை. இப்போது கையில் ஓ>ரு படங்களுடன் கமுக்கமாக நடித்துவருகிறார் சதா.

சதாவைப் போலவே இப்போது பிரியா மணியும் கிளம்பியுள்ளார். பருத்தி வீரன் படத்தை அவர் பெ>தும்எதிர்பார்க்கிறார். இந்தப் படம் வந்தால் எனது ரேஞ்சே வேறு என பேச ஆரம்பித்துள்ளார். பருத்தி வீரன் எனதுதிரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தும் பாருங்கள் என்று கூறி வருகிறாராம் பி>யா.

பருத்தி வீரன் ரிலீஸ் ஆகி ஓடும் வரை புதிய படங்களை ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்ற முடிவில்இருக்கிறாராம். வந்த சில வாய்ப்புகளையும் கூட வெயிட்டிங் லிஸ்ட்டில் போட்டு வைத்திருக்கிறாராம்.

பருத்தி வீரன் சூப்பராக ஓடினால், சம்பளத்தை உயர்த்தி விடவும் திட்டமிட்டுள்ளாராம். பி>யாவின் இந்தபிடிவாதத்தைப் பார்த்து அவரை அணுகிய சில தயரி>ப்பாளர்கள், சதாவை மேற்கோள் காட்டி அப்படி ஆகாமஇருந்த சரித்தான் என்று புலம்பியபடி செல்கிறார்களாம்.

வாஸ்தவமான புலம்பல்தான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil