»   »  வீட்டுல எலி, வெளியில புலி!

வீட்டுல எலி, வெளியில புலி!

Subscribe to Oneindia Tamil

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நேர் மாறாக இருக்கிரார் ப்ரியா மணி.

இந்திய வீரர்கள் உள்ளூர் விளையாட்டுக்களில்தான் கிளப்பலாக ஆடுவார்கள். ஆனால் வெளிநாடுகளுக்குப் போய் விளையாட விட்டால் போட்டு போட்டுக் கொண்டு மண்ணைக் கவ்வி புலம்புவார்கள்.

ஆனால் ப்ரியா மணி சற்றே நேர் மாறானவர். அம்மணிக்கு சுறா பானம், சோம பானம் அருந்துவதில் அலாதிப் பிரியம். வாய்ப்பு கிடைத்தால் சுலா பானத்தையும் ஒரு பிடி பிடிப்பாராம் (திரிஷா இதில் பெரிய எக்ஸ்பர்ட்).

பெங்களூரில் இருக்கும்போது அப்பா, அம்மாவுக்குப் பயந்து கொண்டு அடக்கமாக அமுக்கிக் கொள்வாராம். அதேபோல சென்னைக்கு வந்தாலும் படு கமுக்கமாக, ஆளரவவமே இல்லாத பாருக்குப் போய் தாகம் தீர்த்துக் கொள்வாராம்.

ஆனால் ஹைதராபாத் பக்கம் போய் விட்டால் போதும், அட்டகாசம், அடாவடிதானாம். நினைத்த பாருக்கு நினைத்த நேரத்தில் போய் நிம்மதியாக நீச்சலடிப்பாராம்.

ஹைதராபாத்தில் அவருக்குப் பிடித்தமான ஒரு ஹோட்டல் உள்ளது. அங்குள்ள பாரில் அடிக்கடி அவரைப் பார்க்கலாமாம். படு உற்சாகமாக அவர் உள்ளே தள்ளுவதே அலாதியான காட்சியாக இருக்குமாம். தனியாக இருக்க மாட்டாரம், கூட ஒரு நடிகரும் வருவாராம்.

இருவரும் அடிக்கடி இங்கு இணைந்து வந்து இன்பச் சுற்றுலாப் போவது வழக்கமாம். அந்த இளம் நடிகருடன் இணைந்து வருவதை ப்ரியா மணி ரகசியமாக வைத்துக் கொள்வதில்லையாம். யாராவது கேமராவைத் தூக்கினால் கூட கண்டுக்காமல் கடமையில் தீவிரமாக இருப்பாராம். முடிந்தால் கொஞ்சம் சிரித்து வைப்பாராம்.

அது என்ன வெளியூரில் வெளுத்து வாங்குகிறீர்கள், உள்ளூரில் ஓடிப் போய் விடுகிறீர்கள் என்று யாராவது கேட்டால், சென்னை மக்கள் கட்டுப்பெட்டியானவர்கள். குடிக்கிறா பாரு என்று முத்திரை குத்தி முடக்கிப் போட்டு விடுவார்கள். ஆனால் பெங்களூர், ஹைதராபாத்தில் அந்தப் பிரச்சினையே கிடையாது.

பெங்களூரிலும் நான் சுதந்திரப் பறவைதான். இருந்தாலும் அப்பா, அம்மா இருப்பதால் அதிகம் போக முடியாது. ஆனால் ஹைதராபாத்தில் என்னைக் கேட்க யாரும் கிடையாது, அதனால் என் பாடு அங்கு படு ஜாலிதான் என்கிறார் ப்ரியா.

முத்தழகி, கெட்டழியாம இருந்தா சரிதான்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil