»   »  எப்படின்னாலும் ஓ.கே.தான்!

எப்படின்னாலும் ஓ.கே.தான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எப்படிப்பட்ட ரோல் கொடுத்தாலும் எனக்கு பிரச்சினை இல்லை என்று படுபிராக்டிகலாக பேசுகிறார் பிரியா மணி.

தமிழில் ரொம்ப நாளாக ஆளையே காணவில்லையே என்று பிரியா மணியிடம்விசாரித்தபோது, அதை ஏன் கேக்கறீங்க, நான் இப்போ மலையாளம், கன்னடத்தில்பிசியாக்கும் என்று செல்லமாக சிணுங்கிக் கொண்டார்.

அப்படியா ஆத்தா என்று அங்காலி, பங்காளியாக ஆச்சரியத்துடன் கேட்டோம். கிட்டஉட்கார வைத்து நமது காதுக்குப் பக்கத்தில் கிறக்கமாக பேச ஆரம்பிததார் பிரியா.எனக்கென்று எந்த இமேஜும் கிடையாது. நானும் அப்படிப்பட்ட வளையத்திற்குள் சிக்கிக் கொள்ள ஆசைப்படவில்லை.

முதன் முதலாக இப்போது தெலுங்கிலும் கால் எடுத்து வைக்கிறேன். ஜெகபதிபாபுவுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். நல்லகதை. கணவன், மனைவிக்கு இடையேஏற்படும் ஈகோவால் ஏற்படும் பிரச்சினைகளை விளக்கும் படம் இது.

காமெடியுடன் கூடிய குடும்பப் படம் இது. நல்லா இருக்கும். கன்னடத்திலும்,மலையாளத்திலும் கணிசமான படங்கள் கையில் உள்ளது என்றார் பிரியா. தமிழ்என்னாச்சு என்று கேட்டதற்கு, பருத்தி வீரனில் நடித்துக் கொண்டிருக்கிறேனே. அதில்எனக்கு கிராமத்துப் பெண் வேடம். படம்முழுவதும் பாவாடை, தாவணியில் தான்வருகிறேன். ரொம்ப நல்ல வேடம் அது. என்ஜாய் செய்து நடிக்கிறேன்.

மலையாளத்தில் நான் நடித்த ஒத்தநாணயம் படத்தில் பிச்சைக்காரி வேடத்தில்நடித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்படித்தான் வித்தியாசமானவேடங்களில் நடிக்க ஆசையாக உள்ளேன். அப்படிப்பட்ட படங்களைத்தான் தேர்வு செய்து நடிக்கிறேன். இதனால் தான் தமிழில் கொஞ்சம் கேப்விழுந்து விட்டது என்றார் பிரியா.

பிரியா சொன்னா கேட்டுக்க வேண்டியதுதான்!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil