»   »  பருத்தி வீரனுக்காக காத்திருக்கும் பிரியாமணி

பருத்தி வீரனுக்காக காத்திருக்கும் பிரியாமணி

Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் எப்போ வருமோ, பிரேக் கிடைக்குமா என்று பெரும் எதிர்பார்ப்புடன்காத்திருக்கிறார் பிரமாத பிரியா மணி.

சூப்பர் கெட்டப், அட்டகாசன லுக் என அம்சமாக இருந்தும் ஏனோ, தமிழ் சினிமாவில்பிரியா மணிக்கு இன்னும் சரியான பிரேக் கிடைக்காமல் உள்ளது. இது மற்ற யாரையும்விட பிரியாவுக்கு பெரும் வருத்தமாக உள்ளதாம்.

மலையாளத்தில் நான் நடித்த படங்கள் ஹிட். எனக்கு அங்கு நல்ல மார்க்கெட்டும்கிடைத்தது. ஆனால் அறிமுகமான தமிழில் மட்டும் இன்னும் சரியான கவனிப்புஇல்லையே என்று ஏங்குகிறார் பிரியா மணி.

இப்போது பிரியாவின் முழு நம்பிக்கையும் பருத்தி வீரன் மீதுதான் உள்ளது. இதில் படுவித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார் பிரியா. படம் முழுக்க மிஸ். மணிக்குகாஸ்ட்யூம் பாவாடை, தாவணிதான்.

என்னைப் பரவசப்படுத்திய கதை இது. அதனால்தான் மற்ற படங்களையெல்லாம்ஓரம் கட்டி விட்டு இப்படத்தை ஏற்றுக் கொண்டு முழு கவனத்துடன் நடித்துள்ளேன்.ஆனால் படம் வருவது தாமதமாகிக் கொண்டிருப்பது எனக்கு வருத்தம் தருகிறதுஎன்கிறார்.

சூர்யாவின் தம்பி கார்த்தி நடிக்க அமீர் இயக்கும் பருத்தி வீரன் படம் ரொம்ப காலமாகதயாரிப்பில் இருப்பதால் பிரியாவின் வருத்தம் நியாயமானதுதான். ஆனால் என்னசெய்வது முதலில் சூர்யாவே இதை தயாரிப்பதாக இருந்தது.

ஆனால் திடீரென சூர்யா தனது முடிவை மாற்றிக் கொண்டு ஜில்லுனு ஒரு காதலில்முதலைப் போடப் போய் விட்டார். இதனால் இயக்குனர் அமீரே படத் தயாரிப்பையும்ஏற்று தயாரித்து வருகிறார்.

கையில் காசு தேறத் தேற வீட்டைக் கட்டுவது போல, டப்பு கிடைக்க கிடைக்கபடத்தை தயாரித்து வருகிறார் அமீர். இப்போது கிட்டத்தட்ட படம் முடிவடையும்நிலையை எட்டியுள்ளதாம்.

விரைவில் படத்தை முடித்து வீரனை வெளியே கொண்டு வர திட்டமிட்டுள்ளார் அமீர்.படம்தான் தாமதமாகுதே தவிர சத்தான படமாக உருவாகியுள்ளதாம். இதனால் பிரியாமட்டுமல்ல அமீரும், கார்த்தியும் கூட படு தெம்பாக இருக்கிறார்கள்.இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கும் ஒரு நல்ல இடம் கிடைக்கும் எனபிரியா பூரிப்பாக இருக்கிறார். இன்றைய டிரெண்டுக்கேற்ப குத்தாட்டம், குதியாட்டம்எல்லாம் ஆடிப் பார்க்கலாமே, அப்போதாவது மார்க்கெட் கும்மென தூக்குமே என்றுகொக்கியைப் போட்டோம்.

கிளாமர் செய்வதில் தவறில்லை. அது அவசியமான ஒரு விஷயமாகி விட்டது இன்று.ஆனால் அதற்காக முகம் சுழிக்க வைக்கும் வகையில் குத்தாட்டம் போடுவது எல்லாம்எனக்குப் பிடிக்காத ஒன்று. கண்டிப்பாக நான் அப்படி போக மாட்டேன் என்றுஏமாற்றமான பதிலைத் தருகிறார் பிரியா.

ஏற்றம் பெற ஏற்ற வழியைச் சொன்னால் ஏத்துக்க வேண்டியதுதானே ஆத்தா?

Please Wait while comments are loading...