பாருடா!.. புதுசா சொகுசு கார் வாங்கிய முத்தழகு.. விலை மட்டும் இவ்வளவா?.. கலக்குறாரே பிரியாமணி!
சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என மீண்டும் பிசியான நடிகையாக மாறியுள்ளார் பிரியாமணி. பருத்திவீரன் படத்தில் முத்தழகாக நடித்து அசத்திய பிரியாமணி இந்த வயதிலும் தனது நடிப்பில் எந்தவொரு குறையும் இல்லாமல் அசத்தலான நடிப்பை கொடுத்து அப்ளாஸ் அள்ளி வருகிறார். கடந்த ஆண்டு ஷாருக்கானின் ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரியாமணி நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள ஆர்ட்டிக்கிள் 370 மற்றும் பாமகலாபம் 2 உள்ளிட்ட படங்கள் வேறலெவல் வரவேற்பை பெற்றுள்ளன.
யமி கவுதம் மற்றும் பிரியாமணி நடிப்பில் இந்தியில் வெளியாகி உள்ள ஆர்ட்டிக்கிள் 370 திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தி வரும் நிலையில், தனக்குத் தானே பரிசளிக்கும் விதமாக புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார் பிரியாமணி.

திருமணத்திற்கு பிறகு பெரிய மாற்றம்: இஸ்லாமியரான முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட பிரியாமணி திருமணத்துக்குப் பிறகு முன்பு நடித்தது போல கிளாமராக எல்லாம் நடிக்காமல் சினிமாவில் நடிப்பதையே அதிகமாக குறைத்து விட்டார். ஆனால், அவரது கணவர் முழு சுதந்திரம் கொடுத்த நிலையில், சினிமாவில் மீண்டும் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்த பிரியாமணி பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

மலையாளம் முதல் இந்தி வரை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழில் கஸ்டடி படத்தில் நடித்த பிரியாமணி கடந்த ஆண்டு இறுதியில் மோகன்லால் உடன் இணைந்து நேரு படத்தில் நடித்தார். அந்த படம் 100 கோடி வரை வசூல் செய்து அசத்தியது. தற்போது இந்தி மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் இரு படங்களை ரிலீஸ் செய்து தனக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளார். ஒரு படத்துக்கு குறைந்த பட்சம் 50 முதல் 75 லட்சம் வரை பிரியாமணி சம்பளம் வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொகுசு கார் வாங்கிய முத்தழகு: தனது அம்மா மற்றும் குடும்பத்தினருடன் சென்று நடிகை பிரியாமணி புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன. Mercedes-Benz GLC எனும் அந்த சொகுசு காரின் விலை சுமார் 75 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. கார் வாங்கியதும் ஷோ ரூமில் கேக் வெட்டி குடும்பத்துடன் பிரியாமணி கொண்டாடிய புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











