»   »  திரிஷா ஸ்டைல் ப்ரியாமணி!

திரிஷா ஸ்டைல் ப்ரியாமணி!

Subscribe to Oneindia Tamil

பொது விழாக்களில் பங்கேற்பதில் திரிஷா ஸ்டைலில் படு கிளாமராகவும், கலக்கலாகவும் வர ஆரம்பித்துள்ளார் நடிகை ப்ரியா மணி.

அந்தக் காலத்து நடிகைகள் எல்லாம் திரைப்பட விழாக்கள், பொது விழாக்களுக்கு வருவதாக இருந்தால் பட்டுச் சேலை சரசரக்க, தங்க நகைகள் ஜொலி ஜொலிக்க, மல்லிகைப் பூ மணமணக்க, தளதளப்பாக தங்கத் தேவதைகளாக வருவார்கள்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ். உடை என்ற பெயரில் உடலின் மீது சொற்ப துணிகளுடன் படு கிளாமராக வருவதுதான் இன்றைய நட்சத்திரங்களின் ஸ்டைலாக மாறியுள்ளது. பட்டுச் சேலை கட்டுவதும், உடல் முழுக்க துணியுடன் வருவதும் பாவச் செயலாக மாறி விட்டது.

கவர்ச்சி மிகு உடை அணிவதில் ஷ்ரியாதான் முன்னோடி. அவர் அணிந்து வரும் உடைகளைப் பார்த்தால் பாத்ரூமிலிருந்து நேராக வந்து விட்டாரோ என்றுதான் நினைக்கத் தோன்றும்.

அப்படி ஒரு அடாவடியான உடையில் வந்து போனார் ஷ்ரியா. குட்டை மிடியும், லோ கட் டாப்ஸும் போட்டுக் கொண்டு அவர் வரும்போது புகைப்படக்காரர்களின் கண்கள் ரெடியாகிறதோ இல்லையோ, அவர்களது கேமராக்கள் படு துரிதமாக தயாராகி கிளிக்க ஆரம்பித்து விடும்.

பின்னர் வந்து சேர்ந்தார் திரிஷா. ஷ்ரியாவையே மிஞ்சும் அளவுக்கு படு கிளாமரான உடைகளுடன் தான் அவர் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு வருகிறார். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு அழகு நிலையம் ஒன்றின் தொடக்க விழாவுக்கு அவர் அணிந்து வந்த படுகிளாமரான ஆடையைப் பார்த்து விழாவுக்கு வந்தவர்கள் மிரண்டு போயினர். அப்படி ஒரு அப்பட்டமான டிரஸ்ஸில் வந்து போனார் திரிஷா.

திரிஷாவுக்கு இப்போது வாரிசு வந்தாயிற்று. அவர் வேறு யாருமல்ல, ப்ரியா மணிதான். பருத்தி வீரன் முத்தழகி இமேஜிலிருந்து வெளிவரத் துடிக்கும் ப்ரியா மணி அதற்கு எடுத்துக் கொண்டுள்ள ஆயுதம் கிளாமர்.

பொது விழாக்களுக்கு வரும்போது படு கிளாமராகத்தான் வருகிறார் ப்ரியா மணி. மயக்கும் உடைகளுடன் படு ஜொலி ஜொலிப்பாக வரும் ப்ரியா மணியைப் பார்த்து நிகழ்ச்சிகளுக்கு வருவோர் கிறுகிறுத்துப் போகிறார்களாம்.

சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் அணிந்து வந்த டிரஸ் படு கவர்ச்சியாக இருந்தது. அவரது கவர்ச்சிப் பிரதேசங்களைப் புகைப்படம் எடுக்க போட்டோகிராபர்களிடையே கடும் போட்டியே நிலவியது.

நிகழ்ச்சியில் அவர் இருந்த முக்கால் மணி நேரமும் அவரை புகைப்படம் எடுத்துக் கொண்டே இருந்தவர் புகைப்படக்காரர்கள் என்றால், எந்த அளவுக்கு ப்ரியா மணியின் கவர்ச்சி இருந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil