»   »  பிரியாமணியின் உள்ளம்!

பிரியாமணியின் உள்ளம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images

மார்க்கெட் சொதப்பலாக இருந்தபோது பிரியா மணி நடித்த உள்ளம் என்ற படத்தை இப்போது தூசு தட்டி எடுத்து திரைக்குக் கொண்டு வர முயற்சி நடக்கிறதாம்.

பிரியா மணியை ப.வீ. முன்பு, ப.வீ பின்பு என்று இரண்டாகப் பிரிக்கலாம். பருத்தி வீரனுக்கு முன்பு வரை அவர் பலவிதங்களில் தகிடுதத்தோம் போட்டும் மார்க்கெட் வரவில்லை. ராசியில்லாத நடிகையாகவே நீடித்து வந்தார்.

தமிழில் நடித்தும் தேறவில்லை, மலையாளத்துக்கு மாறியும் போணியாகவில்லை. இந்த நிலையில்தான் பருத்தி வீரன் வந்து பிரியா மணிக்கு 'ப்ரீத்' கொடுத்தது.

இப்போது ஆனானனப்பட்ட திரிஷா, நயனதாராவுக்கே பெரும் மிரட்டலாக மாறி விட்டார் பிரியா மணி.

முன்பு மார்க்கெட் படு சொதப்பலாக இருந்த நேரத்தில் அவர் நடித்த படம் உள்ளம். கூட நடித்தவர் மிதுன் தேஜஸ்வி என்ற புதுமுகம். இப்படம் சில பல காரணங்களால் வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறது.

மிதுன் தேஜஸ்வியுடன் கிளாமரிலும் கலக்கலாக நடித்திருந்தார் பிரியா மணி. தற்போது அவருக்கு மார்க்கெட் படு சூடாக இருப்பதால் உள்ளம் படத்தை எடுத்து வெளியில் விட முயற்சி நடக்கிறதாம்.

விரைவில் உள்ளம் திரைக்கு வரும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாகவும், அதுதொடர்பான வேலைகளில் தயாரிப்புத் தரப்பு இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உள்ளம் வரட்டும், ரசிகர்கள் நெஞ்சங்களைக் கவரட்டும்

Read more about: priyamani

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil