'முத்தம் ஒரு மேட்டரா..!' - ப்ரியாமணி

By Shankar

Priyamani
பருத்தி வீரனில் கற்பழிப்புக் காட்சி, துரோணர் தெலுங்குப் படத்தில் நீச்சலுடைக் காட்சி என புரட்சி பண்ணிய ப்ரியாமணி, அடுத்து ராஜ் என்ற படத்தில் லிப் டு லிப் முத்தக் காட்சியிலும் நடித்து, தனது நடிப்பு ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த முத்தக் காட்சி குறித்து சமீபத்தில் அவர் ஒரு விளக்கமும் அளித்துள்ளார்.

இதோ அந்த விளக்கம், அம்மணியின் வார்த்தைகளில்...

முத்தக்காட்சியில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இயக்குனர் வி.என். ஆதித்யாவும் நாயகன் சுமந்தும் இந்தக் காட்சி கதைக்கு ரொம்ப அவசியமாய் இருப்பதாகக் கூறினர். எனவே அந்தக் காட்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தேன்.

முத்தம் என்பது அருவருப்பான விஷயம் அல்ல. அது ஒரு பெரிய மேட்டரே இல்லை. நடிப்பைப் போல அதுவும் ஒரு சாதாரண விஷயம்தான். அந்தக் காட்சியை மிக அழகாக படமாக்கியிருந்தனர். ஏற்கனவே நீச்சல் உடையில் நடித்தபோது எதிர்ப்பும் ஆதரவும் வந்தன.

எனவே அது மாதிரி காட்சிகளில் நடிப்பதற்கு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கிறேன். கதைக்கு தேவையானால் மட்டுமே கவர்ச்சியாக நடிப்பேன்.

மீண்டும் தமிழ்ப் பட உலகில் ஒரு ரவுண்ட் வர ஆசை. பார்க்கலாம்!", என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X