ஜன நாயகன் ஆடியோ லான்ச்சில் ப்ளூ மார்னிங்கா வந்த பிரியாமணி.. பனாரஸ் பட்டு கட்டிவிட்டது அவரா?
சென்னை: நடிகைகள் த்ரிஷா, சமந்தா, சினேகா உள்ளிட்ட பிரபலங்களுக்கு சேலை கட்டிவிட்டு அழகாக அவர்களை விழாக்களுக்கு தயார்படுத்தி அனுப்பி வைத்து வரும் சேலை டிராப்பிஸ்ட் திவ்யன் ஜெயரூபன் தான் நடிகை பிரியாமணிக்கு நீல நிற சேலையை அழகாக கட்டி விட்டுள்ளார்.
மலேசியாவில் பிரம்மாண்டமாக 80 ஆயிரம் ரசிகர்கள் சூழ ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு இருவரும் மாடர்ன் உடையில் கலந்துக் கொண்டு கலக்கினர்.

நம்ம ஊரு சேலையை அழகாக கட்டிக் கொண்டு மலேசியா தமிழ் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது நம்ம முத்தழகு பிரியாமணி தான். அவருக்கு சேலை கட்டிவிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
த்ரிஷா முதல் சமந்தா வரை: சினிமா பிரபலங்களுக்கு அழகாக மடிப்பு எடுப்பாக தெரியும்படி சேலையை கட்டிவிட்டு வருகிறார் பிரபல டிராப்பிஸ்ட் திவ்யன் ஜெயரூபன். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களுக்கு டாப் நடிகைகளான சமந்தா, த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளுக்கும் சேலை கட்டிவிடும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.
சினேகாவுக்கு டபுள் டிரேப்: சமீபத்தில், நடிகை சினேகா நிகழ்ச்சி ஒன்றில் அழகு பதுமையாக சேலையை கட்டிக் கொண்டு ராம்ப்வாக் செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்காக சினேகாவுக்கு டபுள் டிரேப் சேலையை திவ்யன் ஜெயரூபன் தான் கட்டிவிட்டு இருந்தார். அவருக்கு தனது வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாறிய சினேகாவின் வீடியோவும் வைரலானது. விஜே பிரியங்காவுக்கும் திவ்யன் ஜெயரூபன் சேலை கட்டி விட்டிருந்தார்.

பனராஸ் பட்டுக்கட்டி: ஜன நாயகன் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக மலேசியா சென்றிருந்த பிரியாமணி நீல நிற சேலையில் தனித்துவமாக 80 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் தெரிய வேண்டும் என்பதற்காக ஸ்பெஷல் ஸ்டைலிஸ்ட்டான திவ்யன் ஜெயரூபனை அணுகியுள்ளார். நடிகை பிரியாமணியின் ஃபேவரைட் பாடலான "பனராஸ் பட்டுக்கட்டி" பாடலுடன் உருவான வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார் திவ்யன். நடிகை பிரியாமணி திவ்யன் தனக்கு செம அழகாக சேலை கட்டி விட்டதற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
பிரியாமணி வருத்தம்: விஜய்யின் ஜன நாயகன் படத்தில் பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு இருவரும் தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடனமாட வாய்ப்புக் கிடைத்த நிலையில், தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதது மிகப்பெரிய வருத்தமாக உள்ளது என்றும் ஆனால், விஜய் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே சந்தோஷம் தான் என்றும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பிரியாமணி பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











