”புலிகளை" சுதந்திரமாக விடுங்\க.. கூண்டில் அடைக்காதீர்கள் – நடிகை பிரியாமணி
சென்னை: தமிழில் பருத்தி வீரன், ராவணன் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும், தேசிய விருது பெற்ற நடிகையாகவும் விளங்கிய பிரியாமணி தமிழில் தற்போது படங்கள் கைவசம் இல்லாமல் இருந்து வருகின்றார்.
கன்னட, மலையாள படங்களில் தற்போது நடித்து வருவதுடன் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிலும் தன்னை இணைத்துக் கொண்டு உள்ளார்.

திரிஷா உள்ளிட்ட நடிகைகள் நாய்கள் நலனில் அக்கறை காட்டிவரும் நிலையில், பிரியாமணியோ புலிகள் பாதுகாப்புக்கு குரல் கொடுக்கிறார்.
கண்காட்சிகளிலும், மிருக காட்சி சாலையிலும் புலிகளை கூண்டில் அடைத்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, ‘‘புலிகளை கூண்டில் அடைத்து துன்புறுத்தக் கூடாது. அவைகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications