புலிகளோடு பிரியாமணி... பேஸ்புக் படங்களால் பரபரப்பு
சென்னை: புத்தாண்டைக் குடும்பத்தினரோடு கொண்டாடுவதற்காக வெளிநாடு சென்றுள்ள நடிகை பிரியாமணி, அங்குள்ள புலிக் கோவிலில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் வெளியாகியுள்ளன.
பாரதிராஜாவின் 'கண்களால் கைது செய்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அமீரின் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான பருத்தி வீரன் படம் மூலம் திறமையான நடிகை எனப் பெயரெடுத்தார்.
இந்நிலையில் குடும்பத்தினரோடு புத்தாண்டக் கொண்டாட பாங்காக் சென்றுள்ளார் பிரியாமணி. அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

முத்தழகி....
சமீபத்தில் ஷாரூக்கின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து, அஞ்சாதசண்டி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

புத்தாண்டுக் கொண்டாட்டம்...
தற்போது, இன்னும் சில நாட்களில் பிறக்கவுள்ள புத்தாண்டைக் கொண்டாட குடும்பத்தாருடன் பாங்காக் சென்றுள்ளார் பிரியாமணி. அங்குள்ள புலிகள் கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு சென்றாராம் பிரியாமணி.

போட்டோ....
பொதுவாகவே பிராணிகள் நலனில் அக்கறைக் கொண்ட பிரியாமணி, அங்கு சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த புலிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

மடி மீது தலை வைத்து...
அதில், ஒரு படத்தில் பிரியாமணியின் மடியில் தலை வைத்துப் படுத்திருக்கிறது ஒரு புலி. மற்றொரு படத்தில் புலியை வருடிக் கொடுத்தவாறு போஸ் தருகிறார் பிரியாமணி.

இந்தியா...
புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாடி விட்டு வரும் ஜனவரி 3ல் அவர் இந்தியா திரும்புவார் என எதிர் பார்க்கப் படுகிறது.


Click it and Unblock the Notifications











