ம்ஹூம்..அது ஷாருக்கானுக்காக பண்ணினது.. இனி அப்படிலாம் செய்ய மாட்டேன்..முடிவை மாற்றிய பிரியாமணி!

By

சென்னை: ஷாருக்கானுக்காக இந்தி படத்தில் அப்படி நடித்தேன், இனி அதை செய்ய மாட்டேன் என்று நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Celebrity Quarantine pets | Dhruv | Priya Atlee |Yashika

நடிகை பிரியாமணி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருகிறார். பருத்திவீரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர்.

இப்போது தெலுங்கில் ராணாவுடன் விரதபர்வம் 1992 என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் நக்சலைட்டாக அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

ஃபேமிலிமேன்

ஃபேமிலிமேன்

இந்தியில் அஜய்தேவ்கன் நடிக்கும் மைதான் படத்தில், அவர் மனைவியாக நடிக்கிறார். இந்தி வெப் சீரிஸான ஃபேமிலிமேனில் மனோஜ் பாஜ்பாய் மனைவி கேரக்டரில் நடித்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அடீட் ( Ateet) என்ற புதிய வெப் சீரிஸில், நடிக்கிறார். இதில் அவர் ராணுவ வீரரின் மனைவியாக நடிக்கிறார்.

பேய் இல்லை

பேய் இல்லை

சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையை கொண்ட இதில், ராஜீவ் கண்டெல்வால், சஞ்சய் சுரி ஆகியோரும் நடிக்கின்றனர். 'இந்த தொடரில் திகிலுக்கான கூறுகள் இருக்கும். ஆனால், பயமுறுத்தும் பேய்களோ, ரத்தமோ இருக்காது' என்று தெரிவித்துள்ளார், பிரியாமணி. இந்த வெப்சீரிஸும் மைதான் படமும் வெளியானால் பாலிவுட் என்னை புதிதாகப் பார்க்கும் என்கிறார் பிரியாமணி.

ஷாருக்கான்

ஷாருக்கான்

இவர், ஏற்கனவே ஷாருக்கானின், சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இனி தொடர்ந்து இந்தியில் அப்படி வாய்ப்பு வந்தால் ஆடுவீர்களா? என்று கேட்டபோது, மறுத்தார். 'அந்த படத்தில் ஷாருக்கானுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக ஆடினேன். அந்த வாய்ப்பை மறுக்க முடியவில்லை.

அசுரன் ரீமேக்

அசுரன் ரீமேக்

அப்போதும் சில இந்தி வாய்ப்புகள் வந்தன. ஆனால் சரியான கேரக்டராக இல்லை. இனி ஒரு பாடலுக்கு ஆடும் எண்ணமில்லை. இப்போது நடிக்கிற இந்தி படமும், வெப்சீரிஸும் புதிய வாய்ப்புகளை தரும்' என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் பிரியாமணி. இவர் இப்போது தமிழில் ஹிட்டான அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில், வெங்கடேஷ் மனைவியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X