அடுத்த அப்டேட்: இந்தி படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷூக்கு பதில் பிரியாமணி... அடித்தது லக்
சென்னை: இந்திப் படத்தில் இருந்து நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியேறியதை அடுத்து அந்த கேரக்டரில் மற்றொரு தமிழ் நடிகையான பிரியாமணி நடிக்கிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ், இப்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, இந்தியில் மைதான் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.
இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கைக் கதை இது. இதில், அஜய் தேவகன், ரஹீமாக நடிக்கிறார். அவர் மனைவியாக, கீர்த்தி சுரேஷ் நடிக்க இருந்தார். படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். அமித் சர்மா இயக்குகிறார்.

பெருமை
இதில் நடிப்பது பற்றி கீர்த்தி சுரேஷ் கூறும்போது, இப்படியொரு படத்தில் நடிப்பதை பெருமையாக நினைக்கிறேன். உலகம் அறிந்து கொள்ள வேண்டிய படம். நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதை இது என்று கூறியிருந்தார்.

விலகினார்
இதன் ஷூட்டிங்கிலும் அவர் கலந்துகொண்டிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலகியுள்ளார். இந்தச் செய்தி பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில், அவர் விலகியது உண்மைதான் என்று தெரியவந்துள்ளது.

குண்டாக இருந்தார்
இந்தி 'மைதான்' படத்துக்காக அவர் ஒப்பந்தமானபோது கொஞ்சம் குண்டாக இருந்தார். இப்போது அவர் உடல் எடையை மிகவும் குறைத்துள்ளார். மைதான் படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும். அவர் ஒல்லியானதால் அஜய் தேவ்கனுக்கு தங்கை போல தெரிகிறார். இதனால் அவரை மாற்றியுள்ளதாகக் கூறப்பட்டது.

பிரியாமணி
இந்நிலையில் கீர்த்தி சுரேஷூக்கு பதிலாக மற்றொரு தமிழ் நடிகையான பிரியாமணியை அவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் இப்போது அசுரன் தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார். தமிழில் 'தலைவி' படத்தில் சசிகலா கேரக்டரில் நடித்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











