அசுரன் ரீமேக்... பச்சையம்மாள் கேரக்டரில் அவங்களும் இல்லை... இப்ப யார் நடிக்க போறா பாருங்க
ஐதராபாத்: அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் நடித்த கேரக்டரில் நடிகை ஸ்ரேயா நடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ் ராஜ், ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்துள்ள படம், அசுரன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்த இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார்.

கால்ஷீட் பிரச்னை
ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இந்தப் படத்தில் மஞ்சுவாரியர் நடித்த கேரக்டருக்கு அனுஷ்காவை கேட்டனர். அவர் கால்ஷீட் பிரச்னை காரணமாக மறுத்துவிட்டதால், வேறு நடிகையை தேடி வந்தனர்.

பச்சையம்மாள்
யாரும் செட்டாகாததால் இப்போது நடிகை ஸ்ரேயாவிடம் பேசிவந்தனர். அவர் பச்சையம்மாள் கேரக்டரில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

பிரியாமணி
இந்நிலையில் பிரியாமணி இந்தப் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி பிரியாமணி கூறும்போது, 'என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் முடிவாகவில்லை. இப்போதைக்கு இதை மட்டுமே சொல்ல முடியும் என்றார்.

ஐதராபாத்தில்
ஆனால் படக்குழு, பிரியாமணி இந்தக் கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பதால் பேசிவருகிறோம். அவர் நடிப்பது இன்னும் சில நாட்களில் முடிவாகிவிடும். வரும் 22ஆம் தேதி ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது என்றது.


Click it and Unblock the Notifications