1920 நடக்கும் கதை.. உண்மை சம்பவப் படத்தில் இப்படியொரு கேரக்டர்ல நடிக்கிறாராமே நம்ம முத்தழகு!

By

ஐதராபாத்: உண்மைச் சம்பவக் கதையில் இப்படியொரு கேரக்டரில் நடிக்க இருப்பதாக முத்தழகு தெரிவித்திருக்கிறார்.

Recommended Video

4 படங்களின் part-2 | காத்திருந்த Sequel படங்கள் Ready | Thirukumaran

பிரபல தெலுங்கு நடிகர் ராணா. இவர் தமிழில், ஆரம்பம், பெங்களூர் நாட்கள் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம், இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் கிடைத்தனர். இந்தி படங்களில் நடித்துவருகிறார்.

பிரபு சாலமன்

பிரபு சாலமன்

இவர் இப்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள காடன் படத்தில் நடித்துள்ளார். இதை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி மிரட்டியது. யானையுடன் ராணா, விஷ்ணு விஷால் நிற்கும் புகைப்படங்களும் வைரலாயின. இந்த படம் இப்போது ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி

போலீஸ் அதிகாரி

இந்நிலையில் இதையடுத்து 'விரதபர்வம் 1992' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராணா. தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். வேணு உடுகுலா இயக்கும் இந்தப் படத்தில் நந்திதா தாஸ், பிரியாமணி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஸ்பெஷல் பயிற்சி

ஸ்பெஷல் பயிற்சி

இதற்கு முன் சில படங்களில் ராணா, போலீஸ் கேரக்டரில் நடித்திருந்தாலும் இந்த படத்துக்காக ஸ்பெஷல் பயிற்சி எடுக்க இருந்தார். ஓய்வு பெற்ற முன்னாள் போலீஸ் அதிகாரிகள் இந்தப் பயிற்சியை அவருக்கு அளிக்க இருந்தனர். கொரோனா காரணமாக, அந்த பயிற்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தி உள்ளார் பிரியாமணி.

உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

இவர் பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றவர். அவர் கூறும்போது, இது உண்மை சம்பவங்களின் அடிப்படையிலான கதை. 1920 பின்னணியில் உருவாகிறது. எனது கேரக்டர் பற்றியோ, கதை பற்றியோ இப்போது சொல்ல இயலாது. ஆனால், அது முக்கியமான கேரக்டர். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை ஆவலோடு எதிர்பார்க்கிறேன் என்று சொன்னார் பிரியாமணி. இந்நிலையில் பெண் நக்சலைட்டாக அவர் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X