ஹீரோயின்
பிரியா மணி. சுத்தமான தமிழ்ப் பெண். கொஞ்சமாய் ஸ்னேகா சாயலில் அட்டகாசமாய் இருக்கிறார். படு மாடர்ன்லுக்.
இவர் நடித்து இன்னும் ஒரு படமும் வெளியாகவில்லை. ஆனால், அடுத்தடுத்து சான்ஸ்கள் கிடைக்கஆரம்பித்துவிட்டன.
ரோமியோ என்ற படத்தில் முதலில் புக் ஆனவர் தான் இந்த பிரியா மணி. ஆனால், அந்தப் படம் இன்னும்ஆரம்பிக்கப்படவே இல்லை.
இந் நிலையில் தான் பாரதிராஜாவின் கண்களில் பட்டார். இதையடுத்து தான் எடுத்து வரும் கண்களால் கைது செய்படத்தில் புக் செய்தார். ஆனால், இதன் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துவிட்டு ஈர நிலம் படப்பிடிப்பில் இறங்கினார்பாரதிராஜா. இதனால் கண்களால் கைது செய் நின்று போனது.
முதல் படம் ஆரம்பிக்கவே இல்லை, இரண்டாவது படம் பாதியில் நின்று போனது. இதனால் பிரியா மணிக்குரொம்பவே வருத்தத்தில் இருந்தார்.
இப்போது ஈரநிலம் நல்ல ரிசல்டைக் கொடுத்துள்ளதால் கண்களால் கைது செய் படப்பிடிப்பை மீண்டும் மிகஉற்சாகமாக துவக்கியிருக்கிறார் பாரதிராஜா. இதனால் குதூகலத்துடன் மீண்டும் சூட்டிங் போக ஆரம்பித்துள்ளபிரியா மணியை சூட்டிங் ஸ்பாட்டில் வைத்துப் பார்த்து அசந்த, லட்சுமி கலா புரடெக்ஷன்ஸ் கம்பெனியின்தயாரிபபாளர் அங்கேயே வைத்து அட்வான்ஸை கையில் திணித்துவிட்டாராம்.
இந்த நிறுவனம் தயாரிக்கும் ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் பிரியா மணி தான் ஹீரோயின். ஹீரோபுதுமுகம் ரோஷன்குமாராம். இந்தப் படத்தின் சூட்டிங் தான் தொடங்கவில்லையே தவிர பாடல்கள், இசை தயாராகஉள்ளன.
நெடுங்காலமாக ஓய்வில் இருந்த தேவா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். வைரமுத்து அட்டகாசமானபாடல்களை எழுதித் தந்துவிட்டாராம். பாடல்களும் இசையும் அனைவர் மனதையும் கொள்ளையடிக்கும்என்கின்றார்கள்.
பிரியா மணியை வர்ணித்து ஹீரோ பாடும் பாடலாக வைரமுத்து எழுதியுள்ள வரிகளில் தமிழும் கற்பனையும்தாண்டவம் ஆடியிருக்கிறதாம். பிரியா மணி போட்டோவை வைரமுத்துவிடம் கொடுத்து எழுதச்சொல்லியிருப்பார்களோ?


Click it and Unblock the Notifications











