»   »  அலை பாயும் ப்ரியாமணி

அலை பாயும் ப்ரியாமணி

Subscribe to Oneindia Tamil

என்ன மாதிரி கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கத் தயார் என்று வாய்ப்புக்காக அலை பாயந்து கொண்டிருக்கிறார் பிரியாமணி.

தமிழில் கண்களால் கைது செய் கைவிட்டதால் விழுந்தவர் இன்னும் எழுந்திருக்கவே இல்லை.

தனுசுடன் இவர் நடிக்க பாலுமகேந்திரா இயக்கும் அது ஒரு கனாக் காலம் இழுத்துக் கொண்டே போகிறது.

இந்தப் படம் தவிர வேறு எந்தப் படமும் ப்ரியாமணியிடம் இல்லை. கனாக் காலம் சூட்டிங்கும் எப்போதாவது ஒருமுறையேநடக்கிறது.

இதனால் தமிழ் போனல் போச்சு என்று தாய் மொழியான மலையாளத்துக்குப் போனார். ஆனால், அங்கு பட வாய்ப்புக்களை விடநிறைய ஜொள்ளர்களை சந்திக்கும் வாய்ப்புத் தான் கிடைத்தது.

இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு மலையாளத் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த அட்ஜட்மெண்ட்கள்இவருக்கு அங்கு புதிய வாய்ப்புக்களைப் பெற உதவிய வண்ணம் தான் உள்ளன.

ஆனால், மலையாளத் திரையுலகமா அல்லது தெலுங்கா என்று சந்தேகப்படும் அளவுக்கு ப்ரியாமணியிடம் ஆடை குறைப்பைஅமலாக்க ஆரம்பித்துவிட்டார்கள் சேட்டன்கன்.

வேறு வழியில்லாததால் சேலையில் ஒரு சோலை மாதிரியான வெளிப்படையான ரோல்களை செய்ய ஆரம்பித்துவிட்டார்ப்ரியாமணி. கவர்ச்சியில் பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறார் இந்த முன்னாள் பெங்களூர் மாடல்.

ஆனால், படத்துப் படம் ப்ரியாமணியிடம் இருந்து மலையாள இயக்குனர்களும் கேரமராமேன்களும் ரொம்ப அதிகமாகவேஎதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். கவர்ச்சியை கூட்டச் சொல்லி நச்சரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்படியே போனால் ஷகீலா- சர்மிலி ரேஞ்சுக்கு கொண்டு போய்விடுவார்கள் என்ற பயத்தில் இருக்கும் ப்ரியாமணி, தனது தமிழ்வேட்டையை மீண்டும் தீவிரமாக்கியிருக்கிறார்.

முதலில் தனது தாராளமயக் கொள்கையை விளக்கும் வகையில், ஆல்பம் தயாரித்து கோடம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துப்பார்த்தார். ஆல்பம் ஒரு சுற்று வந்தாலும், அதற்கு உரிய பலன் கிடைக்கவில்லை.

இதனால் மீடியேட்டர்களை வைத்து வாய்ப்புக்களைத் தேடிப் பார்த்தார். அவர்களுக்கு நல்ல கமிஷன் தருவதாகவும் உறுதிதந்திருந்தார். கமிஷனுக்காக அவர்களும் ப்ரியாமணிக்கு வாய்ப்பு பிடிக்க லோ லோ என அலைந்தனர். ஆனால், யாரும்சாயவில்லை.

இதனால் இப்போது தானே நேரடியாகக் களத்தில் இறங்கி வாய்ப்பு கேட்டு வருகிறார்.

தான் சந்திக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் எப்படிப்பட்ட ரோலிலும் நடிக்கத் தயார். நான் அப்படி, இப்படி நடிக்கமாட்டேன் என்று பொய் செய்தி பரப்புகிறார்கள். நான் எந்த கண்டிசனும் போட மாட்டேன், எப்படி சொன்னாலும் அப்படி நடித்துத்தருகிறேன் என்று தன்னிலை விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்.

இனியாவது ப்ரியாமணிக்கு யோகம் அடிக்குமா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil