twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தோட்டா ப்ரியா மணி யுனிவர்சிட்டியில் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் காக்க.. காக்க படத்தில் வில்லனாக வந்து படு அட்டகாசம் செய்த ஜீவன் மீண்டும் ஹீரோவாகிறார். அவருக்குஜோடியாக நடிக்கப் போவது ப்ரியா மணி."தோட்டா என்ற படத்தின் மூலம் அவருக்கு இந்த ஹீரோ ரீ-எண்ட்ரி கிடைக்கவுள்ளது.இப்போது தனுஷுக்கு ஜோடியாக பாலு மகேந்திராவின் "அது ஒரு கனாக்காலம் படத்தில் மட்டுமே நடித்து வரும் ப்ரியா மணி டிவி விளம்பரங்களிலும் பல்வேறுநிறுவனங்களில் சாலையோர ஹோர்டிங்குகளிலும் தலைகாட்டி வருகிறார். விளம்பரப் படங்களே போதும் என்ற அளவுக்கு ப்ரியாமணியின் கைவசம் அத்தனைவாய்ப்புக்கள்.தமிழ் சினிமாவில் சான்ஸ்களுக்காக முட்டி மோதிப் பார்த்துவிட்டு, கவர்ச்சியாக ஆல்பம் எல்லாம் ரவுண்டில் விட்டும் முயற்சித்து விட்டு நடப்பது நடக்கட்டும் எனவாய்ப்புக்காக அலைவதை அவர் நிறுத்திய நேரம் நல்ல நேரம் போலும்.அடுத்தடுத்து இரண்டு படங்கள் அவரைத் தேடி வந்துள்ளன. அதில் ஒன்று தோட்டா. மற்றொன்று மது.அது ஒரு கனாக்காலம் படத்தில் வேலைக்காரியின் மகளாக நடித்திருக்கிறார் ப்ரியா மணி. இப்படம் வெளிவந்தால் தனக்கு மிகப் பெரிய பிரேக் கிடைக்கும் என்றநம்பிக்கையில் உள்ளார்.இந்த நிலையில் இந்த இரு படங்களும் ஒப்பதமாகி ப்ரியாமணியை துள்ளிக் குதிக்க வைத்துள்ளன.தோட்டாவில் "காக்க காக்க ஜீவனுக்கும் ஹீரோவாக புனர்ஜென்மம் கிடைத்துள்ளது. அதில் இவருக்கு ஜோடியாக ப்ரியா மணி நடிக்கிறார். ஜீவனை அவ்வளவு லேசில்மறந்திருக்க மாட்டீர்கள். யுனிவர்சிட்டி படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் காக்க காக்கவில் அவர் காட்டிய வில்லத்தன் தான் படு டாப் ஆக அமைந்தது.தொடர்ந்து அதே போல துப்பாக்கித் தூக்கும் வில்லன் கேரக்டர்களாகவே வந்து நிற்கவே, ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் அமைதியாகக் காத்திருந்தார் இந்தஅமெரிக்க ரிட்டர்ன் பார்ட்டி.காத்திருத்ததற்கு தோட்டா மூலமாக இப்போது பலன் கிடைத்திருக்கிறது. ஆனால் இதிலும் கேங் லீடர் வேடம் தானாம். ஹீரோவாக என்றதால் ஏற்றுக் கொண்டாராம்.சேரிப் பகுதியில் பிறந்த ஒருவன் சந்தர்ப்பவசத்தால் எப்படி ஊரையே கதிகலங்க வைக்கும் தாதாவாகிறான் என்பது தான் படத்தின் கதை. அதிரடி சண்டைக் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட்டாம் (எப்படியும் தெலுங்கில் டப் செய்து காசு பார்த்து விடலாம்!)இவர்கள் தவிர தலைவாசல் விஜய், எஸ்.எஸ்.சந்திரன், வடிவேலு, மனோஜ் கே.ஜெயன், சம்பத், சபீதா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கின்றனர். செல்வா இயக்கும் இந்தப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோட்டா வேகமாக வளர்ந்து வருகிறது.தோட்டாவை அடுத்து ப்ரியா மணி புக்காகியுள்ள படம் மது. இதில் இவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் ஜித்தன் படத்தின் நாயகன் ரமேஷ்.இதுவும் ஆக்ஷன் கலந்த காதல் கதையாம். இதில் சிலுவை என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. இவரும் கொஞ்சம்இடைவெளிக்குப் பிறகு தமிழுக்குத் திரும்பியுள்ளார்.காமெடிக்கு விவேக்கை புக் செய்துள்ளனர். இப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் இசை ஞானி இளையராஜா. இசைக்கு இப் படத்தில் அதிக முக்கியத்துவம்கொடுத்துள்ளனர். 5 அருமையான பாடல்களைப் போட்டுத் தந்துவிட்டாராம் இசைஞானி.மற்றொரு முக்கிய அம்சமும் உண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எடிட்டர் பி.லெனின் இப்படத்தில் பணியாற்றுகிறார். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிஇயக்கப் போகிறவர் கே.தென்னரசு. இவருக்கு இது முதல் படம்.கேரளாவிலுள்ள மாஹே, கோழிக்கோடு, பாண்டிச்சேரி, ஊட்டி என உள்ளூரிலும், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என வெளிநாடுகளிலுமாக வளரப் போகிறது மது.அது ஒரு கனாக் காலத்துடன் இந்த இரு படங்களும் வெளி வந்தால் தனக்கு தமிழில் ஒரு நிலையான இடம் (அட்லீஸ்ட் 2 வருடத்துக்காவது) கிடைத்துவிடும் என்றுநம்பிக் கொண்டிருக்கிறார் ப்ரியாமணி.

    By Staff
    |

    யுனிவர்சிட்டியில் ஹீரோவாக அறிமுகமாகி பின்னர் காக்க.. காக்க படத்தில் வில்லனாக வந்து படு அட்டகாசம் செய்த ஜீவன் மீண்டும் ஹீரோவாகிறார். அவருக்குஜோடியாக நடிக்கப் போவது ப்ரியா மணி.

    "தோட்டா என்ற படத்தின் மூலம் அவருக்கு இந்த ஹீரோ ரீ-எண்ட்ரி கிடைக்கவுள்ளது.

    இப்போது தனுஷுக்கு ஜோடியாக பாலு மகேந்திராவின் "அது ஒரு கனாக்காலம் படத்தில் மட்டுமே நடித்து வரும் ப்ரியா மணி டிவி விளம்பரங்களிலும் பல்வேறுநிறுவனங்களில் சாலையோர ஹோர்டிங்குகளிலும் தலைகாட்டி வருகிறார். விளம்பரப் படங்களே போதும் என்ற அளவுக்கு ப்ரியாமணியின் கைவசம் அத்தனைவாய்ப்புக்கள்.

    தமிழ் சினிமாவில் சான்ஸ்களுக்காக முட்டி மோதிப் பார்த்துவிட்டு, கவர்ச்சியாக ஆல்பம் எல்லாம் ரவுண்டில் விட்டும் முயற்சித்து விட்டு நடப்பது நடக்கட்டும் எனவாய்ப்புக்காக அலைவதை அவர் நிறுத்திய நேரம் நல்ல நேரம் போலும்.

    அடுத்தடுத்து இரண்டு படங்கள் அவரைத் தேடி வந்துள்ளன. அதில் ஒன்று தோட்டா. மற்றொன்று மது.

    அது ஒரு கனாக்காலம் படத்தில் வேலைக்காரியின் மகளாக நடித்திருக்கிறார் ப்ரியா மணி. இப்படம் வெளிவந்தால் தனக்கு மிகப் பெரிய பிரேக் கிடைக்கும் என்றநம்பிக்கையில் உள்ளார்.

    இந்த நிலையில் இந்த இரு படங்களும் ஒப்பதமாகி ப்ரியாமணியை துள்ளிக் குதிக்க வைத்துள்ளன.

    தோட்டாவில் "காக்க காக்க ஜீவனுக்கும் ஹீரோவாக புனர்ஜென்மம் கிடைத்துள்ளது. அதில் இவருக்கு ஜோடியாக ப்ரியா மணி நடிக்கிறார். ஜீவனை அவ்வளவு லேசில்மறந்திருக்க மாட்டீர்கள். யுனிவர்சிட்டி படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் காக்க காக்கவில் அவர் காட்டிய வில்லத்தன் தான் படு டாப் ஆக அமைந்தது.


    தொடர்ந்து அதே போல துப்பாக்கித் தூக்கும் வில்லன் கேரக்டர்களாகவே வந்து நிற்கவே, ஒரு படத்தையும் ஒப்புக் கொள்ளாமல் அமைதியாகக் காத்திருந்தார் இந்தஅமெரிக்க ரிட்டர்ன் பார்ட்டி.

    காத்திருத்ததற்கு தோட்டா மூலமாக இப்போது பலன் கிடைத்திருக்கிறது. ஆனால் இதிலும் கேங் லீடர் வேடம் தானாம். ஹீரோவாக என்றதால் ஏற்றுக் கொண்டாராம்.

    சேரிப் பகுதியில் பிறந்த ஒருவன் சந்தர்ப்பவசத்தால் எப்படி ஊரையே கதிகலங்க வைக்கும் தாதாவாகிறான் என்பது தான் படத்தின் கதை. அதிரடி சண்டைக் காட்சிகள்தான் படத்தின் ஹைலைட்டாம் (எப்படியும் தெலுங்கில் டப் செய்து காசு பார்த்து விடலாம்!)


    இவர்கள் தவிர தலைவாசல் விஜய், எஸ்.எஸ்.சந்திரன், வடிவேலு, மனோஜ் கே.ஜெயன், சம்பத், சபீதா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கின்றனர். செல்வா இயக்கும் இந்தப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோட்டா வேகமாக வளர்ந்து வருகிறது.

    தோட்டாவை அடுத்து ப்ரியா மணி புக்காகியுள்ள படம் மது. இதில் இவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறவர் ஜித்தன் படத்தின் நாயகன் ரமேஷ்.

    இதுவும் ஆக்ஷன் கலந்த காதல் கதையாம். இதில் சிலுவை என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆஷிஷ் வித்யார்த்தி. இவரும் கொஞ்சம்இடைவெளிக்குப் பிறகு தமிழுக்குத் திரும்பியுள்ளார்.

    காமெடிக்கு விவேக்கை புக் செய்துள்ளனர். இப் படத்தின் இன்னொரு முக்கிய அம்சம் இசை ஞானி இளையராஜா. இசைக்கு இப் படத்தில் அதிக முக்கியத்துவம்கொடுத்துள்ளனர். 5 அருமையான பாடல்களைப் போட்டுத் தந்துவிட்டாராம் இசைஞானி.

    மற்றொரு முக்கிய அம்சமும் உண்டு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எடிட்டர் பி.லெனின் இப்படத்தில் பணியாற்றுகிறார். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிஇயக்கப் போகிறவர் கே.தென்னரசு. இவருக்கு இது முதல் படம்.

    கேரளாவிலுள்ள மாஹே, கோழிக்கோடு, பாண்டிச்சேரி, ஊட்டி என உள்ளூரிலும், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து என வெளிநாடுகளிலுமாக வளரப் போகிறது மது.

    அது ஒரு கனாக் காலத்துடன் இந்த இரு படங்களும் வெளி வந்தால் தனக்கு தமிழில் ஒரு நிலையான இடம் (அட்லீஸ்ட் 2 வருடத்துக்காவது) கிடைத்துவிடும் என்றுநம்பிக் கொண்டிருக்கிறார் ப்ரியாமணி.

      Read more about: priyamani gets 2 more films
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X