லக்கி கேர்ள் ப்ரியா மணி! ப்ரியா மணிக்கு ஒரு வழியாக தமிழில் நல்ல காலம் பிறந்துவிட்டது.நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்திக் நடிக்கும் பருத்தி வீரன் படத்தில் ஹீரோயினாக புக் செய்யப்பட்டுள்ள அவரைத் தேடி மதுஎன்ற புதிய படமும் வந்துவிட்டது.ஏற்கனவே பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக் காலம் படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும், காக்க.. காக்க வில்லன் ஜீவாஹீரோவாக அறிமுகமாகும் தோட்ட படத்திலும் ப்ரியாமணி தான் ஹீரோயின்.அடுத்தடுத்து தமிழில் வாய்ப்புக்கள் வந்து வாசல் கதவைத் தட்டுவதால் பெங்களூரை விட்டுவிட்டு ஒரேயடியாக சென்னைக்கேகுடியேறிவிட்டார். சிறிது காலம் சென்னையில் தனது அத்தை வீட்டில் தங்கியிருந்தவர் இப்போது தனக்கே சொந்தமாக ஒருவீட்டைப் பிடித்துக் கொண்டுவிட்டார்.கண்களால் கைது செய் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்த பெங்களூரைச் சேர்ந்த கேரளத்து சேச்சி சிறிது காலம்மிகவும் கஷ்டப்பட்டார். தமிழ் கைவிட்டதால் சொந்த பாஷையான மலையாளத்தில் நடிக்கப் போனார்.மேலும் கன்னடப் படம் ஒன்றிலும் நடித்தார். அந்த ஊர் ஹீரோ சுதீப்போடு ப்ரியாமணி நடித்த அந்தப் படம் பெரிய அளவில்போணியாகவில்லை. இதனால் வேறு வாய்ப்பு கிடைக்கவில்லை.மலையாளத்தில் படம் கிடைத்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை என்பதால் தமிழிலும் தெலுங்கிலும் வாய்ப்புக்காகஅலைந்தார். கிளாமர் காட்ட தான் தயார் என்று தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து தகவல் சொன்னன். எல்லாவற்றுக்கும்உச்சமாக தன்னைத் தானே பல் விதங்களிலும் காட்டி படம் பிடித்து ஆல்பங்களாகப் போட்டு ரவுண்டுவிட்டார்.அந்த ஆல்பம் விட்ட நேரம் நல்ல நேரம் போலிருக்கிறது. மடமடவென தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புக்களுடன் குதூகலித்துக்கொண்டிருக்கிறார்.அது ஒரு கனாக் காலம் படத்தில் வீட்டு வேலைக்காரியின் மகளாக நடிக்கும் ப்ரியா மணி, அந்தப் படம் வெளிவந்தால் தனக்குமிகப் பெரிய பிரேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.இத்தோடு சூர்யாவின் தம்பி கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் அமீரின் டைரக்ஷனில் பருத்தி வீரன் வாய்ப்பு வந்துவிட்டது.இந்தப் படம் வில்லேஜ் சப்ஜெக்டாம். கிராமத்துப் பெண் கேரக்டரில் நடிக்கிறார் ப்ரியாமணி.இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன்,சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி, மகன் சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாக்களில் எப்போதும் அமைதியாகவே பேசும் கமல் இங்கு மிகச் சூடாக பேசினார். அவர் கூறுகையில்,நான் சினிமாவை நேசிப்பவன் என்று கூறுகிறார்கள். நான் சினிமாவை விட மனிதர்களை அதிகம் நேசிப்பவன். இங்குள்ளஅனைவருக்குமே அவையடக்கம் உண்டு. எனக்கும் உண்டு. ஆனால் சிலர் என்னை சீண்டிப் பார்க்க முயற்சிக்கிறார்கள்.அப்போது எனது அவையடக்கம் இல்லாமல் போனாலும் போகலாம். எனவே அது வேண்டாம்.சிவக்குமார் உச்சத்தில் இருந்தபோது நான் சாதாரண நடிகன். ஆனால் சிவக்குமார் தான் ஒரு சூப்பர் நடிகர் என்று நினைத்ததேஇல்லை.நான் சிறுவயதில் படப்பிடிப்பு நடக்கும்போது அரங்கத்துக்கு வெளியே நின்று கொண்டிருப்பேன். அப்போது சிவக்குமார் நான்சிறிய நடிகன், சிறுவன் என்று உதாசீனப்படுத்தாமல் தனது காரிலேயே அழைத்துச் செல்வார். அதையெல்லாம் நான் மறந்திடமாட்டேன்.அவரது இரண்டாவது வாரிசு அறிமுகமாகும் இந்தப் படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றார் கமல்.பருத்தி வீரனைத் தொடர்ந்து மது என்ற படத்தில் ஜித்தன் பட நாயகன் ரமேசுக்கு ஜோடியாக புக் ஆகியிருக்கிறார் ப்ரியாமணி.ஆக்ஷன் கலந்த காதல் கதையாம் மது.இப்படத்தின் முக்கிய அம்சம் இசைஞானி இளையராஜா. இசைக்கு இப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்தப்படத்தில் 5 அருமையான டியூன்களைப் போட்டுத் தந்துவிட்டாராம் ராஜா.புதுவை மாநிலத்திற்குட்பட்ட மாஹே, பாண்டிச்சேரி, ஊட்டி, கோழிக்கோடு என உள்ளூரிலும், சிங்கப்பூர், மலேசியா,தாய்லாந்து என வெளி நாடுகளிலுமாக வளரப் போகிறதாம் மது.

By Staff

ப்ரியா மணிக்கு ஒரு வழியாக தமிழில் நல்ல காலம் பிறந்துவிட்டது.

நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்திக் நடிக்கும் பருத்தி வீரன் படத்தில் ஹீரோயினாக புக் செய்யப்பட்டுள்ள அவரைத் தேடி மதுஎன்ற புதிய படமும் வந்துவிட்டது.

ஏற்கனவே பாலுமகேந்திராவின் அது ஒரு கனாக் காலம் படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும், காக்க.. காக்க வில்லன் ஜீவாஹீரோவாக அறிமுகமாகும் தோட்ட படத்திலும் ப்ரியாமணி தான் ஹீரோயின்.


அடுத்தடுத்து தமிழில் வாய்ப்புக்கள் வந்து வாசல் கதவைத் தட்டுவதால் பெங்களூரை விட்டுவிட்டு ஒரேயடியாக சென்னைக்கேகுடியேறிவிட்டார். சிறிது காலம் சென்னையில் தனது அத்தை வீட்டில் தங்கியிருந்தவர் இப்போது தனக்கே சொந்தமாக ஒருவீட்டைப் பிடித்துக் கொண்டுவிட்டார்.

கண்களால் கைது செய் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்த பெங்களூரைச் சேர்ந்த கேரளத்து சேச்சி சிறிது காலம்மிகவும் கஷ்டப்பட்டார். தமிழ் கைவிட்டதால் சொந்த பாஷையான மலையாளத்தில் நடிக்கப் போனார்.


மேலும் கன்னடப் படம் ஒன்றிலும் நடித்தார். அந்த ஊர் ஹீரோ சுதீப்போடு ப்ரியாமணி நடித்த அந்தப் படம் பெரிய அளவில்போணியாகவில்லை. இதனால் வேறு வாய்ப்பு கிடைக்கவில்லை.

மலையாளத்தில் படம் கிடைத்த அளவுக்கு பணம் கிடைக்கவில்லை என்பதால் தமிழிலும் தெலுங்கிலும் வாய்ப்புக்காகஅலைந்தார். கிளாமர் காட்ட தான் தயார் என்று தயாரிப்பாளர்களை நேரில் சந்தித்து தகவல் சொன்னன். எல்லாவற்றுக்கும்உச்சமாக தன்னைத் தானே பல் விதங்களிலும் காட்டி படம் பிடித்து ஆல்பங்களாகப் போட்டு ரவுண்டுவிட்டார்.

அந்த ஆல்பம் விட்ட நேரம் நல்ல நேரம் போலிருக்கிறது. மடமடவென தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புக்களுடன் குதூகலித்துக்கொண்டிருக்கிறார்.

அது ஒரு கனாக் காலம் படத்தில் வீட்டு வேலைக்காரியின் மகளாக நடிக்கும் ப்ரியா மணி, அந்தப் படம் வெளிவந்தால் தனக்குமிகப் பெரிய பிரேக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

இத்தோடு சூர்யாவின் தம்பி கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் அமீரின் டைரக்ஷனில் பருத்தி வீரன் வாய்ப்பு வந்துவிட்டது.இந்தப் படம் வில்லேஜ் சப்ஜெக்டாம். கிராமத்துப் பெண் கேரக்டரில் நடிக்கிறார் ப்ரியாமணி.

இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன்,சிவக்குமார், அவரது மனைவி லட்சுமி, மகன் சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


விழாக்களில் எப்போதும் அமைதியாகவே பேசும் கமல் இங்கு மிகச் சூடாக பேசினார். அவர் கூறுகையில்,

நான் சினிமாவை நேசிப்பவன் என்று கூறுகிறார்கள். நான் சினிமாவை விட மனிதர்களை அதிகம் நேசிப்பவன். இங்குள்ளஅனைவருக்குமே அவையடக்கம் உண்டு. எனக்கும் உண்டு. ஆனால் சிலர் என்னை சீண்டிப் பார்க்க முயற்சிக்கிறார்கள்.அப்போது எனது அவையடக்கம் இல்லாமல் போனாலும் போகலாம். எனவே அது வேண்டாம்.

சிவக்குமார் உச்சத்தில் இருந்தபோது நான் சாதாரண நடிகன். ஆனால் சிவக்குமார் தான் ஒரு சூப்பர் நடிகர் என்று நினைத்ததேஇல்லை.


நான் சிறுவயதில் படப்பிடிப்பு நடக்கும்போது அரங்கத்துக்கு வெளியே நின்று கொண்டிருப்பேன். அப்போது சிவக்குமார் நான்சிறிய நடிகன், சிறுவன் என்று உதாசீனப்படுத்தாமல் தனது காரிலேயே அழைத்துச் செல்வார். அதையெல்லாம் நான் மறந்திடமாட்டேன்.

அவரது இரண்டாவது வாரிசு அறிமுகமாகும் இந்தப் படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்றார் கமல்.

பருத்தி வீரனைத் தொடர்ந்து மது என்ற படத்தில் ஜித்தன் பட நாயகன் ரமேசுக்கு ஜோடியாக புக் ஆகியிருக்கிறார் ப்ரியாமணி.ஆக்ஷன் கலந்த காதல் கதையாம் மது.

இப்படத்தின் முக்கிய அம்சம் இசைஞானி இளையராஜா. இசைக்கு இப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இந்தப்படத்தில் 5 அருமையான டியூன்களைப் போட்டுத் தந்துவிட்டாராம் ராஜா.

புதுவை மாநிலத்திற்குட்பட்ட மாஹே, பாண்டிச்சேரி, ஊட்டி, கோழிக்கோடு என உள்ளூரிலும், சிங்கப்பூர், மலேசியா,தாய்லாந்து என வெளி நாடுகளிலுமாக வளரப் போகிறதாம் மது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X