எனக்கு எல்லாம் சூட் ஆகும்: ப்ரியா மணி எனக்கு கிளாமர் பொருந்தாது என்று கூறுபவர்கள், அது ஒரு கனாக்காலம் படத்தில் எனது கிளாமரைப் பார்த்து அசந்து போகப்போகிறார்கள் என்று அசாத்திய நம்பிக்கையுடன் கூறுகிறார் ப்ரியா மணி.கண்களால் கைது செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ப்ரியா மணி அவ்வளவாக சோடை போகவில்லை. மாறாக மலையாளசினிமாவில் கவர்ச்சியாக நடிக்கப் போய் விட்டார். அங்கு ஓட்ட நாணயம் என்ற படத்தில் பிச்சைக்காரி வேடத்தில் கலக்கலாக நடித்திருந்தார் ப்ரியா மணி. இதன் மூலம்மலையாளத்திலும் நல்ல பெயர். போதாக்குறைக்கு அவருக்கு சில பட வாய்ப்புகள் தமிழில் கிடைத்துள்ளன.தனுஷுடன் அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்து முடித்துள்ள ப்ரியா மணி, தற்போது சூர்யாவின் தம்பி கார்த்தியுடன்பருத்தி வீரனில் பாவாடை தாவணியில் அப்பாவி கிராமத்துப் பொண்ணாக நடித்து வருகிறார்.ஒங்க கட்டுக்கு கவர்ச்சி சரிப்படாதே என்று ப்ரியாவிடம் கேட்டால் போதும் கொந்தளித்துப் போய் விடுகிறார். யார் சொன்னதுஎனக்கு கிளாமர் பொருந்தாது என்று? நான் இப்போது நடித்துள்ள அது ஒரு கனாக்காலம் வரட்டும். எனது கிளாமரைப் பார்த்து எல்லோரும் அசந்து போகப் போகிறார்கள். என்னாலும் கிளாமரில் கலக்க முடியும் என்பதை அதுஒரு கனாக்காலம் நிரூபிக்கும். அதுமட்டுமல்ல, பருத்தி வீரனிலும் நான் பாவாடை தாவணி, சேலை காஸ்ட்யூமில் வருகிறேன். இதிலும் எனது வேடம் சற்றே கிளாமாரனது தான். அதனால் தூள் கிளப்பி வருகிறேன். கவர்ச்சியாக நடிப்பதற்கு நான்எப்போதுமே தயங்கியதில்லை. எனவே கிளாமருக்கு நான் பொருத்தமில்லை என்று யாராவது கூறினால் அதை நம்பாதீர்கள்!எனது முதல் படம் தோல்வி அடைந்ததற்கு நான் காரணமில்லை. ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நாம் படத்தைக் கொடுக்கவேண்டும். இப்போதெல்லாம் குத்துப் பாட்டு இல்லாவிட்டால் அந்தப் படம் ஓடாது. நல்ல காமடி இருக்க வேண்டும். இந்த இரண்டும் கண்களால் கைது செய் படத்தில் இல்லை. பிறகு எப்படி படம் ஓடும்?ரசிகர்களுக்கேற்ற படத்தைக் கொடுக்க இயக்குனர்கள் தவறுவதால் தான் அதில் நடித்தவர்களும் பிரபலமாகாமல் போய்விடுகிறார்கள். இதுதான் எனக்கும் நேர்ந்தது.இப்போது எனக்கு கை நிறைய படங்கள் இருக்கிறது. சந்தோஷமாக நடித்து வருகிறேன். தமிழில் தனுஷுடன் அது ஒருகனாக்காலம், கார்த்தியுடன் பருத்தி வீரன், ஜீவா தம்பி ரமேஷுடன் ஒரு படம், பிறகு தோட்டா என பிசியாக உள்ளேன். மலையாளத்திலும் 2 படங்கள் உள்ளன என்று நீட்டி முழக்கி ஓய்ந்தார் ப்ரியா மணி. ஏறி வந்த ஏணியை இப்படி தூக்கிப் போட்டு மிதிச்சிப்புட்டீகளே அம்மணி!

By Staff

எனக்கு கிளாமர் பொருந்தாது என்று கூறுபவர்கள், அது ஒரு கனாக்காலம் படத்தில் எனது கிளாமரைப் பார்த்து அசந்து போகப்போகிறார்கள் என்று அசாத்திய நம்பிக்கையுடன் கூறுகிறார் ப்ரியா மணி.

கண்களால் கைது செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ப்ரியா மணி அவ்வளவாக சோடை போகவில்லை. மாறாக மலையாளசினிமாவில் கவர்ச்சியாக நடிக்கப் போய் விட்டார்.

அங்கு ஓட்ட நாணயம் என்ற படத்தில் பிச்சைக்காரி வேடத்தில் கலக்கலாக நடித்திருந்தார் ப்ரியா மணி. இதன் மூலம்மலையாளத்திலும் நல்ல பெயர். போதாக்குறைக்கு அவருக்கு சில பட வாய்ப்புகள் தமிழில் கிடைத்துள்ளன.

தனுஷுடன் அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்து முடித்துள்ள ப்ரியா மணி, தற்போது சூர்யாவின் தம்பி கார்த்தியுடன்பருத்தி வீரனில் பாவாடை தாவணியில் அப்பாவி கிராமத்துப் பொண்ணாக நடித்து வருகிறார்.

ஒங்க கட்டுக்கு கவர்ச்சி சரிப்படாதே என்று ப்ரியாவிடம் கேட்டால் போதும் கொந்தளித்துப் போய் விடுகிறார். யார் சொன்னதுஎனக்கு கிளாமர் பொருந்தாது என்று? நான் இப்போது நடித்துள்ள அது ஒரு கனாக்காலம் வரட்டும்.


எனது கிளாமரைப் பார்த்து எல்லோரும் அசந்து போகப் போகிறார்கள். என்னாலும் கிளாமரில் கலக்க முடியும் என்பதை அதுஒரு கனாக்காலம் நிரூபிக்கும். அதுமட்டுமல்ல, பருத்தி வீரனிலும் நான் பாவாடை தாவணி, சேலை காஸ்ட்யூமில் வருகிறேன்.

இதிலும் எனது வேடம் சற்றே கிளாமாரனது தான். அதனால் தூள் கிளப்பி வருகிறேன். கவர்ச்சியாக நடிப்பதற்கு நான்எப்போதுமே தயங்கியதில்லை. எனவே கிளாமருக்கு நான் பொருத்தமில்லை என்று யாராவது கூறினால் அதை நம்பாதீர்கள்!


எனது முதல் படம் தோல்வி அடைந்ததற்கு நான் காரணமில்லை. ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப நாம் படத்தைக் கொடுக்கவேண்டும். இப்போதெல்லாம் குத்துப் பாட்டு இல்லாவிட்டால் அந்தப் படம் ஓடாது.

நல்ல காமடி இருக்க வேண்டும். இந்த இரண்டும் கண்களால் கைது செய் படத்தில் இல்லை. பிறகு எப்படி படம் ஓடும்?ரசிகர்களுக்கேற்ற படத்தைக் கொடுக்க இயக்குனர்கள் தவறுவதால் தான் அதில் நடித்தவர்களும் பிரபலமாகாமல் போய்விடுகிறார்கள். இதுதான் எனக்கும் நேர்ந்தது.

இப்போது எனக்கு கை நிறைய படங்கள் இருக்கிறது. சந்தோஷமாக நடித்து வருகிறேன். தமிழில் தனுஷுடன் அது ஒருகனாக்காலம், கார்த்தியுடன் பருத்தி வீரன், ஜீவா தம்பி ரமேஷுடன் ஒரு படம், பிறகு தோட்டா என பிசியாக உள்ளேன்.

மலையாளத்திலும் 2 படங்கள் உள்ளன என்று நீட்டி முழக்கி ஓய்ந்தார் ப்ரியா மணி.

ஏறி வந்த ஏணியை இப்படி தூக்கிப் போட்டு மிதிச்சிப்புட்டீகளே அம்மணி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X