»   »  கிளாமருக்கு ஜே! வல்கருக்கு நோ பிரியாமணி நல்லா பேசக் கற்றுக் கொண்டு விட்டார். அதுவும் எப்படி? படு தெளிவாகபாரதிராஜாவின் கையால் குட்டுப்பட்ட பிரியாமணி, அதற்குப் பிறகு ஆளைக் காணோம். முதல் படமே காலைவாரி விட்டதால் அவரைத் தேடி பட வாய்ப்புகள் ஓடி வரவில்லை. அவரும் அதற்காகக் கவலைப்பட்டது போலத்தெரியவில்லை.தமிழ் தான் அவரைக் கைவிட்டதே தவிர தாய் மொழியான மலையாளம் கை கொடுத்தது. பிச்சைக்காரி வேடத்தில்மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார் பிரியாமணி. படம் பரவாயில்லை என்றாலும் அங்கும் அவருக்கு பெரியஅளவில் வாய்ப்புகள் வரவில்லை.இடையில் கன்னடப் படமொன்றில் நடித்துத் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார். இப்போது நீண்டஇடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்து அப்படம் ஒரு வழியாகதீபாவளிக்கு திரையைத் தொட்டுள்ளது.இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரிலும், மோக தாக உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி ரசிகர்களைகிறங்கடித்திருக்கிறார். இப்படத்தில் பிரியா. என்ன பிரியா நீங்களும் கிளாமர் கடலில் குதித்து விட்டீர்கள் போலஎன்று அவரிடம் கேட்டபோது, கிளாமராக நடிப்பது தப்பே இல்லை. அதை நான் முதலிலேயே தெளிவாக கூறியுள்ளேன். கிளாமராக நடிப்பதற்கும், வல்கராக நடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அழகை, அழகாக காட்டுவதில்என்ன தப்பு இருக்க முடியும், என்ன ஆபாசம் இருக்க முடியும்?அதே சமயம், நான்கு சுவர்களுக்குள் மட்டுமே காட்ட வேண்டியதை வெளிப்படையாக காட்டினால் தான் அதுஆபாசம், வல்கர். அதுபோன்ற காட்சிகளில் நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.கிஸ் கொடுப்பது எந்த நாட்டிலாவது தவறு என்று சொல்லப்படுகிறதா? இல்லையே!

கிளாமருக்கு ஜே! வல்கருக்கு நோ பிரியாமணி நல்லா பேசக் கற்றுக் கொண்டு விட்டார். அதுவும் எப்படி? படு தெளிவாகபாரதிராஜாவின் கையால் குட்டுப்பட்ட பிரியாமணி, அதற்குப் பிறகு ஆளைக் காணோம். முதல் படமே காலைவாரி விட்டதால் அவரைத் தேடி பட வாய்ப்புகள் ஓடி வரவில்லை. அவரும் அதற்காகக் கவலைப்பட்டது போலத்தெரியவில்லை.தமிழ் தான் அவரைக் கைவிட்டதே தவிர தாய் மொழியான மலையாளம் கை கொடுத்தது. பிச்சைக்காரி வேடத்தில்மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார் பிரியாமணி. படம் பரவாயில்லை என்றாலும் அங்கும் அவருக்கு பெரியஅளவில் வாய்ப்புகள் வரவில்லை.இடையில் கன்னடப் படமொன்றில் நடித்துத் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார். இப்போது நீண்டஇடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்து அப்படம் ஒரு வழியாகதீபாவளிக்கு திரையைத் தொட்டுள்ளது.இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரிலும், மோக தாக உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி ரசிகர்களைகிறங்கடித்திருக்கிறார். இப்படத்தில் பிரியா. என்ன பிரியா நீங்களும் கிளாமர் கடலில் குதித்து விட்டீர்கள் போலஎன்று அவரிடம் கேட்டபோது, கிளாமராக நடிப்பது தப்பே இல்லை. அதை நான் முதலிலேயே தெளிவாக கூறியுள்ளேன். கிளாமராக நடிப்பதற்கும், வல்கராக நடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அழகை, அழகாக காட்டுவதில்என்ன தப்பு இருக்க முடியும், என்ன ஆபாசம் இருக்க முடியும்?அதே சமயம், நான்கு சுவர்களுக்குள் மட்டுமே காட்ட வேண்டியதை வெளிப்படையாக காட்டினால் தான் அதுஆபாசம், வல்கர். அதுபோன்ற காட்சிகளில் நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.கிஸ் கொடுப்பது எந்த நாட்டிலாவது தவறு என்று சொல்லப்படுகிறதா? இல்லையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரியாமணி நல்லா பேசக் கற்றுக் கொண்டு விட்டார். அதுவும் எப்படி? படு தெளிவாக

பாரதிராஜாவின் கையால் குட்டுப்பட்ட பிரியாமணி, அதற்குப் பிறகு ஆளைக் காணோம். முதல் படமே காலைவாரி விட்டதால் அவரைத் தேடி பட வாய்ப்புகள் ஓடி வரவில்லை. அவரும் அதற்காகக் கவலைப்பட்டது போலத்தெரியவில்லை.

தமிழ் தான் அவரைக் கைவிட்டதே தவிர தாய் மொழியான மலையாளம் கை கொடுத்தது. பிச்சைக்காரி வேடத்தில்மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தார் பிரியாமணி. படம் பரவாயில்லை என்றாலும் அங்கும் அவருக்கு பெரியஅளவில் வாய்ப்புகள் வரவில்லை.

இடையில் கன்னடப் படமொன்றில் நடித்துத் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார். இப்போது நீண்டஇடைவெளிக்குப் பிறகு பாலு மகேந்திராவின் அது ஒரு கனாக்காலம் படத்தில் நடித்து அப்படம் ஒரு வழியாகதீபாவளிக்கு திரையைத் தொட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமரிலும், மோக தாக உணர்ச்சிகளையும் வெளிக்காட்டி ரசிகர்களைகிறங்கடித்திருக்கிறார். இப்படத்தில் பிரியா. என்ன பிரியா நீங்களும் கிளாமர் கடலில் குதித்து விட்டீர்கள் போலஎன்று அவரிடம் கேட்டபோது,

கிளாமராக நடிப்பது தப்பே இல்லை. அதை நான் முதலிலேயே தெளிவாக கூறியுள்ளேன்.


கிளாமராக நடிப்பதற்கும், வல்கராக நடிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. அழகை, அழகாக காட்டுவதில்என்ன தப்பு இருக்க முடியும், என்ன ஆபாசம் இருக்க முடியும்?

அதே சமயம், நான்கு சுவர்களுக்குள் மட்டுமே காட்ட வேண்டியதை வெளிப்படையாக காட்டினால் தான் அதுஆபாசம், வல்கர். அதுபோன்ற காட்சிகளில் நான் கண்டிப்பாக நடிக்க மாட்டேன்.

கிஸ் கொடுப்பது எந்த நாட்டிலாவது தவறு என்று சொல்லப்படுகிறதா? இல்லையே! அன்பின் வெளிப்பாடு தான்முத்தம். அதுபோலத் தான், நான் அது ஒரு கனாக்காலம் படத்தில் தனுஷுக்குக் கொடுத்திருக்கும் கிஸ்.

அந்தக் காட்சிக்கு, அந்தப் பாத்திரங்களுக்கு கிஸ் தேவைப்பட்டது, அப்படி நடித்தேன். அதில் ஆபாசம் இருக்காது.

நான் கிளாமராக நடிப்பதற்கு எனது வீட்டில் தடையே இல்லை. யாரும் என்னைத் தடுக்கவில்லை. நடிப்பு எனதுவிருப்பம். நானாக விருப்பப்பட்டுத்தான் நடிக்க வந்தேன். எனது குடும்பத்தினர் எனக்கு மிகவும் உறுதுணையாகஇருக்கிறார்கள்.


அது ஒரு கனாக்காலம் இப்போது வந்துள்ளது. அடுத்து பருத்தி வீரன் படத்தில் எனது முழுத் திறமைகளையும்காட்டி கலக்கி வருகிறேன்.

அது வந்த பிறகு என்னைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள். நானும் ஒரு நல்ல நடிகை என்பதை தமிழ் ரசிகர்கள்புரிந்து கொள்வார்கள்.

இதே போல வசீகராவிலும் எனது முழுத் திறமையையும் கொட்டி கொடுத்துள்ளேன். அதுவும் நன்கு பேசப்படும்.

என்னைப் பொருத்தவரை எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்பது முக்கியமல்ல, எப்படி ரசிகர்கள் மனதில்இடம் பெறுகிறோம், என்ன மாதிரியான கேரக்டரில் நடிக்கிறோம் என்பதுதான் வெரி வெரி இம்பார்டன்ட்.

அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். போதுமா? என்று கேட்டு நிறுத்தினார் பிரியா.

அது ஒருகனாக்காலத்தில், பிரியா படு கிளாமராக நடித்த சில காட்சிகளை சென்சார்காரர்கள் வெட்டிவிட்டார்களாம். அதை பிரியாவும் சொல்லவில்லை, நாமும் கேட்கவில்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil