Priyanka Mohan :கண்ணாடியுடன் பிரியங்கா அருள்மோகன்.. அழகான போட்டோஷுட்!
சென்னை : நடிகை பிரியங்கா மோகன் டாக்டர், டான் போன்ற படங்களில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார்.
சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்திலும் கிராமத்து கெட்டப்பில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப்படங்களில் இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கண்ணாடியுடன் புதிய போட்டோஷுட் எடுத்த பிரியங்கா : நடிகை பிரியங்கா அருள் மோகன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பிரியங்கா அருள் மோகன், அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயன் ஜோடியாகவே நடித்தார். டான் என்ற இந்தப் படம் காமெடியை மையமாக கொண்டு வெளியானது.
இந்த இரு படங்களும் சிவகார்த்திகேயனுக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. பிரியங்காவிற்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்த வெற்றிப் படங்கள் அடுத்ததாக சூர்யவுடன் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் பிரியங்காவிற்கு வாய்ப்பை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்திருந்தார் பிரியங்கா. தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த படங்களுக்கான கதைத்தேர்வுகளில் இவர் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான ஒந்து கதை ஹெல என்ற படத்தின்மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா மோகன். பின்னர் அதே ஆண்டில் தெலுங்கில் சூப்பர்ஹிட்டான கேங் லீடர் படத்தில் அறிமுகமானார். தற்போது ஜெயம்ரவி -ராஜேஷ் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திலும் பிரியங்கா கமிட்டாகியுள்ளார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கும் ராஜேஷ், இந்தப் படத்தில் பிரியங்காவை எப்படி பயன்படுத்துவார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதனிடையே தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்திலும் பிரியங்கா ஜோடி சேர்ந்துள்ளார். தெலுங்கில் நானியுடன் கேங் லீடர், சர்வானந்துடன் ஸ்ரீகாரம் படங்களில் நடித்துள்ள பிரியங்கா, அடுத்ததாக மகேஷ்பாபு, பவன் கல்யாண் ஆகியோருடன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பவன் கல்யாணுடன் ஓஜி என்ற படத்தில் இவர் ஜோடி சேர்ந்துள்ளார். அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் பிரியங்கா மோகன்.

இதனிடையே சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படும் பிரியங்கா மோகன், அடுததடுதது சிறப்பான போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவரது புகைப்படங்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கண்ணாடியை மையமாக வைத்து வயல்வெளிகளிலும் பல வித்தியாசமான பேக்கிரவுண்ட்களிலும் பிரியங்கா இந்த போட்டோஷுட்டை எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே 4.4 லட்சம் லைக்ஸ்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











