»   »  கிளாமர் கேரட் பிரியங்கா!

கிளாமர் கேரட் பிரியங்கா!

Subscribe to Oneindia Tamil

ஜில்லென்று ஒரு கேரட் என பிரியங்கா ஷைலுவைப் பார்த்தால் கூப்பிடத் தோன்றும்.அப்படி ஒரு குப் அழகு பிரியங்காவுக்கு.

ஷைலு சமீபத்தில் ஷைன் பண்ணிய படம் சென்னைக் காதல். இதில் பரத்தின்தங்கச்சியாக நடித்திருந்தார் ஷைலு. இதைத் தொடர்ந்து கண்ணா நீ எனக்கு மட்டும்தாண்டா என்ற படத்தில் முப்பெரும் நாயகியரில் ஒருவராக உழைத்துக்கொண்டிருக்கிறார்.

விஜய டி.ராஜேந்தரின் வீராசாமி படத்திலும் பிரியங்கா இருக்கிறாராம். மன்மதக்குஞ்சு மன்சூர் அலிகானின் தயாரிப்பு பிளஸ் அடாவடி நடிப்பில் உருவாகும்என்னைப் பார் யோகம் வரும் படத்திலும் ஷைலு இருக்கிறார்.

ஜமீன் ராஜா என்றும் ஒரு படம் ஷைலு பாக்கெட்டில் உள்ளதாம். இதைத் தவிரசேட்டை, அன்று என்று பல படங்களில் திறமை காட்டி பெரிய லெவலுக்குபேஸ்மென்ட் போட்டு வைத்துள்ளார் பிரியங்கா.

இம்புட்டுப் படத்தில் நடித்துக் கலக்குகிறீர்களே நீங்கள் ஆந்திராவாடுவா?மலையாளத்து சேச்சியா? மும்பைவாலாவா என்று கேட்டால், அண்ணாத்தே நாம சுத்ததமிழச்சிங்கோ என்று அதிர்ச்சி தருகிறார் பிரியங்கா.

சுத்தத் தமிழச்சியாக இருந்தாலும் தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில்பலக்கப் பேசி பரவசப்படுத்துகிறார் ஷைலு. பாப்பாவுக்கு இப்பத்தான் 19 வயசுநடக்குதாம். ஆனால் பாய்ச்சல் படு பலமா இருக்கே!

உங்க திட்டம்தான் என்ன என்றோம் வெறுத்துப் போய்! இந்த வருடத்துக்குள்மணிரத்தின், பாலச்சந்தர், பாரதிராஜா, அமீர், பாலா போன்ற அத்தனை பெரியதலைகளின் கையால் குட்டுப்படனும், முடியுமா என்று ஏக்கத்தோடு கேட்கிறார்.

இத்தனை பேரின் படங்களையும் திருட்டு விசிடியில் வேண்டுமானால் இந்தவருடத்துக்குள் பார்த்து விட முடியும். அதுக்கு மேல என்னத்தச் சொல்ல!

Please Wait while comments are loading...