»   »  இறங்கி வந்த பிரியங்கா!

இறங்கி வந்த பிரியங்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெயில் படத்தின் 2வது நாயகியான பிரியங்கா, தன்னைத் தேடி வந்த பட வாய்ப்பை முதலில் மறுத்து விட்டு பின்னர் அவராகவே போய்கொடுப்பதைக் கொடுங்க என்று கேட்டு வாங்கி புக் ஆகியுள்ளாராம்.

வெயில் படத்தில் பசுபதியின் காதலியாக வந்து கலக்கலாக நடித்தவர் பிரியங்கா. படு க்யூட்டாக இருக்கும் பிரியங்காவுக்கு, முதல் படமேஆஹாவென ஓடியதால் உச்சி குளிர்ந்து போய் விட்டது.

அடுத்தடுத்து பட வாய்ப்பு குவியும், சம்பளத்தை ஏத்திப்புடலாம் என்று காத்திருந்தவரிடம், இயக்குனர் பொன் ராமன் இயக்க இருக்கும் திருந்தம்படத்தில் ஹரிகுமாருக்கு ஜோடியாக (இவர்தான் தூத்துக்குடி பட நாயகன்) நடிக்க அணுகினார்கள்.

ஆனால் என்னோட ரேஞ்சே வேற, தப்பா இடத்துக்கு வந்துட்டீங்க, போய்ட்டு வாங்க என்று தெனாவட்டாக கூறி அனுப்பி விட்டாராம் பிரியங்கா.

கடுப்பாகிப் போன திருத்தம் யூனிட், வேறு நாயகியைத் தேட முடிவு செய்தனர். இந்த நிலையில் தான், பிரியங்காவுக்கு ஒரு படமும் வரவில்லை.காத்திருந்து ஏமாந்து போன பிரியங்கா, இதென்னடா சோதனை, இப்படியே விட்டால் ஆளையே மறந்துடுவாங்களே என்று பயந்து போனார்.

பின்னர் தனது பிடிவாதத்தைக் குறைத்துக் கொண்டு ஹரிக்குமாரை நேரில் சந்தித்து நடந்ததை மனசில் வச்சுக்காதீங்க, என்ன சம்பளம்வேண்டுமானாலும் கொடுங்க, நான் நடிச்சுத் தர்றேன் என்று கூறி அவரை சமாதானப்படுத்தி, குளிர்வித்து அந்தப் பட வாய்ப்பைப் பெற்றாராம்.

இதேபோல, மேலும் சில பிடிவாதங்களையும் அவர் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். கிளாமர் காட்ட அவரிடம் ஆரம்பத்திலிருந்தேதயக்கம் கிடையாதம். நல்ல கேரக்டராக இருந்தால் சம்பளம் பற்றிக் கவலையே பட மாட்டாராம்.

நயனதாரா, ஆசின் ரேஞ்சுக்கு தானும் ஒரு நாள் பெரிய ரேஞ்சுக்கு உயருவோம் என்று படு நம்பிக்கையாக கூறுகிறார் பிரியங்கா.

பின்னுங்கக்கா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil