»   »  பிசியாகும் பிரியங்கா!

பிசியாகும் பிரியங்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெயில் படத்தில் ஜில்லென்று வந்து போன பிரியங்கா, தமிழில் மெதுவாக பிசியாகி வருகிறார். புதுப் புதுப் படங்கள் தேடி வருவதால்,குஷியாகியிருக்கிறாராம்.

வெயில் படத்தில் பசுபதியின் காதலியாக வந்து அசத்தியவர் பிரியங்கா. முட்டை விழிகள், பளிச் முகம், ஜில் அழகு என சிம்ப்ளி சூப்பர்ப் ஆகஇருப்பவர் பிரியங்கா.

முதல் படத்திலேயே பலரையும் கவர்ந்தவர். இதனால் அவரைத் தேடி புதுப் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதாம். ஆரம்பத்தில்பிரியங்காவுக்கு திருப்திகரமான வாய்ப்பு ஏதும் வரவில்லை. பெரிய வாய்ப்பாக வரும் என்று காத்திருந்த அவருக்கு ஆப்புதான் வந்தது!

இதனால் அப்செட் ஆகிப் போன பிரியங்கா வருகிற வாய்ப்புகளையெல்லாம் ஓ.கே. சொல்ல ஆரம்பித்தார். அப்படித்தான் திருத்தம் படத்தில்ஹரிக்குமாருடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். முதலில் இந்த வாய்ப்பை வேண்டாம் என்றார். பின்னர் அவராகவே அப்ரோச் செய்துஹீரோயின் ஆனார்.

இப்போது இன்னொரு புதுப் படவாய்ப்பும் பிரியங்காவைத் தேடி வந்துள்ளது. இயக்குநர் பாசிலிடம் பல படங்களுக்கு துணை இயக்குநராகப்பணியாற்றியுள்ள பன்னீர் செல்வம் முதல் முறையாக ஒரு படத்தை இயக்கப் போகிறார்.

தொல்லைபேசி என்று இப்படத்திற்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார். விசில் நாயகன் விக்ரமாதித்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிபோடுகிறார் பிரியங்கா.

பிரியங்காவுக்கு தொல்லை பேசியில் படு வித்தியாசமான கேரக்டராம். படத்தில் அவரது கேரக்டர் குறித்து பன்னீர் செல்வம் விளக்கியதுமே,கண்டிப்பா நான்தான் சார் நடிப்பேன் என்று கூறி விட்டாராம் பிரியங்கா. அத்தோடு நில்லாமல் பன்னீர் கேட்ட நாட்களுக்குரிய கால்ஷீட்டையும்அள்ளிக் கொடுத்து விட்டாராம்.

பிரியங்காதான் ஹீரோயின் என்றாலும் கூட மும்பையைச் சேர்ந்த திவ்யா, ஆர்த்தி தாகூர் ஆகியோரும் நாயகிகளாக நடிக்கிறார்களாம்.

படப்பிடிப்பு முழுவதும் மூணார், குற்றாலம், ஊட்டி என ஜில்லான இடங்களில் நடைபெறவுள்ளதாம்.

அடுத்தடுத்து பட வாய்ப்பு வருவதால் பிரியங்கா, சந்தோஷ பெண்ணாக மாறியிருக்கிறார். கிடைக்கிற வாய்ப்புகளை விடாமல் சூப்பராக நடித்துதூள் கிளப்புவதே இப்போதைய ஒரே லட்சியம் என்கிறார் பிரியங்கா.

பின்னுங்க, பிரியங்கா!

Read more about: priyanka gets another movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil