ஓவர் சீன்போடும் இளம் நடிகை…நடிச்சதே நாலு படம் தான் அதுக்குள்ள இப்படியா?

சென்னை : இளம் நடிகையான பிரியங்கா மோகன் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்து ஓவர் சீன்போட்டு வருவதாக கோலிவுட் சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

க்யூட் நடிகையான பிரியங்கா அருள் மோகன், ஒந்து கதை ஹெல என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

அதற்கு பின் தெலுங்கு சினிமாவில் "கேங் லீடர்" திரைப்படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இந்தப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

மெழுகு டாலு நீ... அழகு ஸ்கூல்லு நீ...என ரசிகர்களின் மனதில் ஆட்டம் போட்டவர் பிரியங்கா அருள் மோகன். தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான டாக்டர் படத்தில் நடித்திருந்தார். நகைச்சுவைத் திரைப்படமான இப்படம் வசூலை வாரிக்குவித்து 100 கோடி கிளப்பில் இணைந்தது. இந்த படத்தை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் இணைந்து நடித்தார்.

முன்னணி நடிகர்களுடன்

முன்னணி நடிகர்களுடன்

டாக்டர், டான் படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். இந்த படமும் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

தனுஷூக்கு ஜோடியாக

தனுஷூக்கு ஜோடியாக

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் இன்று தொடங்கி உள்ளது. 1930களில் நடைபெறும் கதைக்களத்தை கொண்ட இப்படத்தில், கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துவருகின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நடிச்சதே நாலு படம் தான்

நடிச்சதே நாலு படம் தான்

இந்நிலையில் குறுகிய காலத்திலேயே சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற பிரியங்கா அருள் மோகன், படப்பிடிப்புகளுக்கு தாமதமாக வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அது மட்டுமில்லாம்ல் ஓவர் ஆட்டிட்யூட் காட்டி சீன் போடுவதாகவும் சொல்லப்படுகிறது. நடிச்சதே நாலு படம் தான் அதுக்குள்ள இப்படி சீன் போட்டால் படவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்க வேண்டியதுதான் என விஷயம் தெரிந்தவர்கள் அவருக்கு அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X