வாரணாசி படத்தில் மெயின் வில்லியே இவர் தானா?.. பிரியங்கா சோப்ரா பர்த்டேக்கு ராஜமெளலி சர்ப்ரைஸ்!

சென்னை: ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி ஆஸ்கர் விருதையே இந்திய சினிமாவுக்கு எடுத்து வந்த பெருமைக்குச் சொந்தக்காரரான ராஜமெளலி அடுத்து என்ன செய்யப் போகிறார் என ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹாலிவுட் இயக்குநர்களான ஜேம்ஸ் கேமரூன், கிறிஸ்டோபர் நோலனுக்கு இணையாக ராஜமெளலியும் உலக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

Priyanka Chopra 44th Birthday SS Rajamouli wishes her with 2 different shades Varanasi posters
Photo Credit:

மகேஷ் பாபுவை வைத்து வாரணாசி படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வரும் ராஜமெளலி அந்த படத்தில் மந்தாகினி கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைத்து வரும் நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியங்கா சோப்ராவுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கும் விதமாக வாரணாசி படத்தின் 2 விதமான லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளார்.

ஹேப்பி பர்த்டே பிரியங்கா சோப்ரா: விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் டாப் ஹீரோயினாக மாறிய பிரியங்கா சோப்ரா கடந்த சில ஆண்டுகளாக மேட்ரிக்ஸ் 4 உள்ளிட்ட ஏகப்பட்ட ஹாலிவுட் படங்களில் நடித்து சர்வதேச நடிகையாக மாறியுள்ளார். இந்நிலையில், ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்துள்ள நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு மந்தாகினி கதாபாத்திரத்தின் புதிய புகைப்படங்களை ஷேர் செய்து ராஜமெளலி வாழ்த்து சொல்லி உள்ளார்.

ஹீரோயினும் வில்லியும் இவர்தானா?: மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக வெறும் டூயட் பாட மட்டும் பிரியங்கா சோப்ராவை ராஜமெளலி ஆன்போர்ட் செய்யவில்லை. முதல் போஸ்டரிலேயே மஞ்ச சேலையில் கையில் துப்பாக்கி கொடுத்து ஆக்‌ஷன் ஹீரோயினாகவே காட்டியிருந்தார். இந்நிலையில், 44வது பிறந்தநாளை கொண்டாடும் பிரியங்கா சோப்ராவின் 2 விதமான லுக் போஸ்டர்களை வெளியிட்டு சிரித்தால் அழகு, சிரிக்கவில்லை என்றால் நெருப்பு" என்கிற அர்த்தத்தில் கேப்ஷன் போட்டு வாழ்த்தியுள்ளார். இந்த படத்தில் பிருத்விராஜ் மட்டுமின்றி பிரியங்கா சோப்ராவும் வில்லியாக மாறுகிறாரா? என்கிற கேள்விகளை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர்.

மண்டோதரி?: ராமாயண கதையை தழுவி வாரணாசி படம் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், கும்பா எனும் கும்ப கர்ணனாக பிருத்விராஜ் நடித்து வருகிறார். பிரியங்கா சோப்ரா மண்டோதரி கதாபாத்திரத்தில் ஃபிளாஷ்பேக்கில் வரப்போகிறாரா? அல்லது சூர்ப்பனகை கதாபாத்திரமா? என்றும் ரசிகர்கள் யூகங்களை கிளப்பி உள்ளனர். அடுத்த ஆண்டு பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள வாரணாசி படம் உலகளவில் பாக்ஸ் ஆபீஸில் வெயிட்டு காட்டும் என்பது உறுதியாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X