விவாகரத்து சர்ச்சை.. ஒரே ஒரு போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு விளக்கம் கொடுத்த பிரியங்கா சோப்ரா!
மும்பை: பிரியங்கா சோப்ரா ஜோனஸ் என இன்ஸ்டாகிராமில் இருந்த தனது பெயரில் இருந்து ஜோனஸை கட் பண்ணி இணையத்தை அதிர வைத்தார் நடிகை பிரியங்கா சோப்ரா.
அக்கினேனி பெயரை சமந்தா இதே போல நீக்கிய பின்னர் தான் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகின்றனர் என தகவல்கள் பரவின.
பின்னர், ரசிகர்கள் பயந்தது போலவே இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

சமந்தா தந்த ஷாக்
நடிகை சமந்தா தந்த அதே ஷாக் போல பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் பெயரை திடீரென கட் பண்ணி தூக்க ஒட்டுமொத்த திரையுலகம் மற்றும் ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் என்ன ஆனது? ஏன் இப்படியொரு முடிவை எடுத்தாங்க என பர்சனலாவே பல பேர் கேட்க ஆரம்பித்து விட்டனர்.

அம்மா மறுப்பு
வட இந்திய மீடியாக்கள் நேரடியாக பிரியங்கா சோப்ராவின் அம்மா மது சோப்ராவுக்கே போன் செய்து என்ன விஷயம் என விசாரிக்க விவாகரத்து எல்லாம் இல்லைங்க அது முற்றிலும் வதந்தி. என்ன காரணத்துக்காக பிரியங்கா இப்படி பெயர் மாற்றியிருக்கிறாங்க என்பதை அவங்களே சொல்வாங்க என அம்மா போனை கட் செய்துள்ளார்.

பிரியங்கா கமெண்ட்
அதே நேரத்தில் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கணவர் நிக் ஜோனஸ் வொர்க்கவுட் செய்து போட்ட வீடியோவை பார்த்த நடிகை பிரியங்கா சோப்ரா கணவரை பாராட்டி கமெண்ட் போட இன்னும் இவர்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருக்காங்க எந்த பிரச்சனையும் இல்லை என்கிற முடிவு எட்டப்பட்டது.

உறுதி செய்த பிரியங்கா
ஆனாலும், இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஆரம்பித்து விட்டன. விரைவிலேயே விவாகரத்து அறிவிப்பு வெளியாகும் என்றெல்லாம் வதந்திகள் கிளம்பிய நிலையில், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கணவருடன் Thanks Giving Day கொண்டாடிய புகைப்படத்தை ஷேர் செய்து இருவரும் ஒருவரையொருவர் எந்த அளவுக்கு காதலிக்கிறோம் என்பதை மீண்டும் உணர்த்தி உள்ளார் பிரியங்கா சோப்ரா.
Recommended Video

ஐ லவ் யூ ஜோனஸ்
மேலும், அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ஐ லவ் யூ ஜோனஸ் என மிகத் தெளிவாகவே குறிப்பிட்டு விவாகரத்து வதந்திக்கு முழுவதுமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் ஜோஷியக்காரன் யாராவது ஜோனஸை தூக்க சொல்லி இருப்பானோ?


Click it and Unblock the Notifications











