இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட ப்ரியங்கா, கோஹ்லி எவ்வளவு வாங்குகிறார்கள் தெரியுமா?

By Siva

மும்பை: இன்ஸ்டாகிராம் மூலம் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை விட அதிகம் சம்பாதிக்கிறார் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இன்ஸ்டாகிராமில் விளம்பரதாரர்களின் போஸ்ட்டுகளை போட்டு சம்பாதிக்கிறார்கள். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அந்த பட்டியலில் இரண்டே இரண்டு இந்தியர்களின் பெயர்கள் மட்டுமே உள்ளது.

ப்ரியங்கா சோப்ரா

ப்ரியங்கா சோப்ரா

இன்ஸ்டாகிராம் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா 19வது இடத்தில் உள்ளார். இன்ஸ்டாகிராமில் அவரை 43.3 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பர போஸ்ட் போட ரூ. 1 கோடியே 86 லட்சம் வாங்குகிறார்.

விராட் கோஹ்லி

விராட் கோஹ்லி

இன்ஸ்டாகிராம் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி 23வது இடத்தை பிடித்துள்ளார். அவர் ஒரு போஸ்ட் போட ரூ. 1.35 கோடி வாங்குகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் கோஹ்லியை விட ப்ரியங்கா சோப்ரா தான் அதிகம் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைலி ஜென்னர்

கைலி ஜென்னர்

இன்ஸ்டாகிராம் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் தொலைக்காட்சி நடிகை கைலி ஜென்னர் முதலிடத்தில் உள்ளார். கிம் கர்தாஷியனின் சகோதரியான கைலியை இன்ஸ்டாகிராமில் 141 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். அவர் ஒரு போஸ்ட் போட ரூ. 8.7 கோடி வாங்குகிறார்.

பிரபலம்

பிரபலம்

இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடரப்படும் இந்தியராக உள்ளார் ப்ரியங்கா சோப்ரா. அவர் கடந்த சில மாதங்களில் பைலட் பேனா மற்றும் ஒபாகி மெடிக்கல் ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்துள்ளார். தனது பிறந்தநாள் கொண்டாட்டம் காரணமாக ஒரு குட்டி பிரேக் எடுத்த ப்ரியங்கா மீண்டும் சமூக வலைதளங்களை பயன்படுத்தத் துவங்கிவிட்டார்.

பிரச்சனை

பிரச்சனை

முன்னதாக ப்ரியஙகா சோப்ரா தீபாவளி நேரத்தில் பட்டாசுகள் வெடிப்பது தன்னை போன்று ஆஸ்துமாவால் அவதிப்படுவோருக்கு மேலும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று விளம்பரம் செய்தார். இந்நிலையில் அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சிகரெட் பிடித்த புகைப்படம் வெளியானது. அதை பார்த்தவர்கள் இப்பொழுது மட்டும் உங்களுக்கு ஆஸ்துமா சரியாகிவிட்டதா என்று கேட்டு விளாசினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X