படகு விபத்தில் உயிர் தப்பினார் ப்ரியங்கா சோப்ரா

By Shankar

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ப்ரியங்கா சோப்ரா படகு விபத்தில் குடும்பத்தினருடன் உயிர் தப்பினார்.

பிரியங்கா சோப்ரா தனது குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு கடலில் படகு சவாரி செய்ய விரும்பி ஒரு படகை வாடகைக்கு எடுத்தனர்.

வேகமாக சென்ற படகில் அமர்ந்தபடி எல்லோரும் கடல் மற்றும் கடற்கரையோர அழகை ரசித்தபடி சென்று கொண்டு இருந்தனர்.

திடீரென அந்த படகு பவளப்பாறையொன்றில் பயங்கரமாக மோதியது. இதில் படகு உடைந்தது. எல்லோரும் தண்ணீருக்குள் விழுந்து தத்தளித்தனர். இதைப் பார்த்ததும் கடலோர காவல் படையினர் அடுத்த சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு விரைந்தனர்.

உடைந்த படகை பிடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்த அவர்களை வேறு படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். இந்த விபத்தில் பிரியங்கா சோப்ராவும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X