முகத்தில் நிஜ குத்து விட்ட வீராங்கனை… ரத்தம் சொட்ட விழுந்த பிரியங்கா!
டெல்லி: நடிகை பிரியங்கா சோப்ராவின் முகத்தில் வீராங்கனை ஒருவர் விட்ட குத்து காயத்தை ஏற்படுத்தியது. படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டும், தொடர்ந்து நடித்து ஆச்சரியமூட்டினார் பிரியங்கா சோப்ரா.
பிரபல இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம். இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையிலும் கடுமையான பயிற்சி, போராட்டம் மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்.
மேரி கோம் என்ற பெயரிலேயே அவரது வாழ்க்கை வரலாறு இந்தியில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தி சினிமாவின் நம்பர்-1 நடிகை ப்ரியங்கா சோப்ரா, தனது கமர்ஷியல் பார்முலாவை தூக்கி போட்டுவிட்டு மேரி கோமாக நடித்து வருகிறார்.

மேரி கோமுடன்
இதற்காக ப்ரியங்கா, மேரிகோமுடன் சில நாட்கள் தங்கியிருந்து அவரது மேனரிசங்களை கற்றதோடு, குத்துச் சண்டையின் அடிப்படையான விஷயங்களையும் உள்வாங்கிக் கொண்டு நடித்து வருகிறார்.

வீராங்கனையுடன் சண்டை
கதைப்படி உள்ளூர் வீராங்கனை ஒருவருடன் பிரியங்கா சோப்ரா மோதும் காட்சி ஒன்று தர்மசாலாவில் படமாக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு மாநில நிஜமான குத்துச் சண்டை வீராங்கனை, நிஜத்தில் மேரிகோமை எதிர்த்து சண்டை போட்டவர், ப்ரியங்காவுடன் மோதும் காட்சிகள் படமானது.

நிஜ குத்து விழுந்திருச்சே
அந்த வீராங்கனை வேகமாக முகத்தில் குத்த வரும்போது அதனை ப்ரியங்கா கையால் தடுக்க வேண்டும். கொஞ்சம் டைமிங் மிஸ் ஆக ப்ரியங்கா முகத்தில் நிஜ குத்து விழுந்தது.

ரத்தம் சொட்டிய நிலையில்
மேக்அப்பை தவிர வேறு எதையும் பார்த்திராத மென்மையான ப்ரியங்காவின் முகத்தில் பலத்த காயம் பட்டு ரத்தம் கொட்டியது. அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

படப்பிடிப்பு நிறுத்தம்
பிரியங்காவிற்கு ஏற்பட்ட காயத்தினால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இயக்குனர் உமங் குமார் படப்பிடிப்பை நிறுத்தினார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

காயத்தோடு படப்பிடிப்பு
மருத்துவமனைக்கு செல்ல மறுத்த ப்ரியங்கா. இந்த காயத்துடனேயே படப்பிடிப்பை தொடரலாம் அது இயற்கையாக இருக்கும் என்று சொல்ல காயத்துடனேயே படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.

ஒரிஜினல் காயம்
பிரியங்கா வாங்கிய குத்தும், அதனால் ஏற்பட்ட காயமும் படத்தில் அப்படியே இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி.


Click it and Unblock the Notifications











