அம்மாவை விட பொண்ணு என்னம்மா அழகா இருக்காரு.. முதல்முறையாக மகளின் முகத்தை காட்டிய பிரியங்கா சோப்ரா!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இதுவரை தனது மகளின் முகத்தை காட்டாமல் இருந்து வந்த நிலையில் முதல்முறையாக மகளின் முகத்தை பொதுவெளியில் காட்டி உள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட இளையவரான ஹாலிவுட் பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார்.

வாடகைத் தாய் மூலம் கடந்த ஆண்டு பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை கிடைத்த நிலையில், தற்போது தான் குழந்தையின் முகத்தை வெளிக்காட்டி உள்ளார்.

பாலிவுட் டு ஹாலிவுட்

பாலிவுட் டு ஹாலிவுட்

நடிகர் விஜய்யின் தமிழன் படத்தில் நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மாறினார். சமீப காலமாக ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா கடைசியாக மேட்ரிக்ஸ் 4 படத்திலேயே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட் பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸ் என்பவரை கடந்த 2018ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வாடகைத்தாய் மூலம் குழந்தை

வாடகைத்தாய் மூலம் குழந்தை

திருமணம் ஆகி சில ஆண்டுகள் சென்ற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு குழந்தை பிறக்கவில்லை என்பதால், கடைசியாக வாடகைத்தாய் மூலம் அழகிய பெண் குழந்தை ஒன்றை பெற்றுக் கொண்டனர் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி. குழந்தை பிறந்து ஓராண்டாக அவரது முகத்தை காட்டாமல் மறைத்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக அழகிய முகத்தை நிகழ்ச்சி ஒன்றில் வெளிக்காட்டி உள்ளனர்.

அழகிய முகம்

அழகிய முகம்

நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸை விட செம க்யூட்டாகவும் அழகாகவும் அந்த பெண் குழந்தை இருப்பதை பார்த்த ரசிகர்கள் குழந்தை போட்டோக்களை பார்த்து வாவ் என கமெண்ட் போட்டு வருகின்றனர். மல்டி மேரி சோப்ரா ஜோனஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த குழந்தை சமீபத்தில் கணவர் மற்றும் கணவரின் சகோதரர்களுக்கு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரியங்கா சோப்ரா வெளிப்படுத்தி உள்ளார்.

ஹால் ஆஃப் ஃபேம்

ஹால் ஆஃப் ஃபேம்

ஹாலிவுட் பிரபலங்களுக்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஹால் ஆஃப் ஃபேம் என ஒரு சிறப்பு கெளரவ நிகழ்ச்சி நடைபெறும். அந்த இடத்தில் பிரபலங்களின் பெயர்கள் டைல்ஸில் பதிக்கப்பட்டு இருக்கும். இந்நிலையில், ஹாலிவுட் பாடகர்களான நிக் ஜோனஸ் மற்றும் அவரது ஜோனஸ் சகோதரர்களை இந்த ஆண்டு ஹால் ஆஃப் ஃபேம் நிகழ்ச்சியில் கெளரவப்படுத்திய நிகழ்ச்சிக்கு தனது குழந்தையுடன் சென்ற பிரியங்கா சோப்ராவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

படு பிசியாக

படு பிசியாக

கடந்த 2002ம் ஆண்டு விஜய்யின் தமிழன் படத்தில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட் படங்கள், ஹாலிவுட் படங்கள், வெப்சீரிஸ் மற்றும் யூனிசெஃப் உள்ளிட்ட சமூக சேவை என படு பிசியாக சுற்றி சுழன்று வருகிறார். நியூயார்க்கில் ரெஸ்டரன்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். 2021ல் மேட்ரிக்ஸ் 4 படத்தில் நடித்திருந்த பிரியங்கா சோப்ரா இந்த ஆண்டு வெளியாக உள்ள லவ் அகைன் எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X