டைம் இதழின் செல்வாக்கு மிக்க மனிதர்கள் பட்டியலில் ப்ரியங்கா சோப்ரா!
நியூயார்க்: உலகப் புகழ் பெற்ற டைம் இதழின் செல்வாக்கு மிக்க 100 பிரபலங்கள் வரிசையில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவும் இடம் பிடித்துள்ளார்.
மேலும் டைம் இதழின் ஆறு பிரபல அட்டைப் படங்களின் ஒன்றில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இந்தப் பட்டியலில் ஆஸ்கர் விருது வாங்கிய லியனார்டோ டிகாப்ரியோ, ஃபேஸ்புக்' நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் ஆகியோரும் இடம்பெற்றுள்ளார்கள்.
டைம் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தியர்கள்:
சானியா மிர்சா, ‘கூகுள்' சுந்தர் பிச்சை, ரிசர்வ் வங்கியின் ரகுராம் ராஜன், சுற்றுச் சூழல் ஆர்வலர் சுனிதா நரைன் மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சச்சின் பன்சால்- பின்னி பன்சால் ஆகியோர்.
Comments


Click it and Unblock the Notifications