twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்ரியங்கா சோப்ராவின் அடேங்கப்பா சம்பளம்!

    By Shankar
    |

    Priyanka Chopra
    பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் சம்பளம் இதுவரை எந்த நடிகையும் வாங்காத அளவுக்கு ரூ 9 கோடியாக உயர்ந்துள்ளது.

    இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகியுள்ளார் ப்ரியங்கா.

    தமிழ் சினிமாவில் விஜய் ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டின் முதல் நிலை நாயகி இவரே. புதிதாக நடிக்க உள்ள 'ஜன்ஜீர்' இந்திப் படத்துக்கு ரூ.9 கோடி சம்பளத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    இந்தி முன்னணி நடிகைகளான கத்ரீனா கபூப், கரீனா கபூர், தீபிகா படுகோனே போன்றோர் சராசரியாக ரூ 2.5 கோடி முதல் ரூ.4 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். பிரியங்காவும் இதுவரை இவர்கள் வாங்கும் சம்பளத்தைதான் பெற்று வந்தார்.

    ஐஸ்வர்யாராய் தமிழில் வெளியான 'எந்திரன்' படத் தில் ரூ. 6 கோடி வாங்கினார். இதுதான் ஒரு இந்திய நடிகைக்கு தரப்பட்ட அதிகபட்ச சம்பளம்.

    இப்போது அவரை மிஞ்சிவிட்டார் ப்ரியங்கா.

    English summary
    Priyanka Chopra has been signed Zanjeer for a reported 9 crore. Trade sources confirm this is the highest remuneration for a Bollywood actress.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X